முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
ரஜிதா அரிச்சந்திரன் அவர்களின் புகைப்படம்

ரஜிதா அரிச்சந்திரன்

நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை

  • கவிஞர்
  • சிறுகதை எழுத்தாளர்
  • கட்டுரையாளர்
  • பாடலாசிரியர்
  • ஆய்வாளர்
  • இலக்கிய விமர்சகர்

பதிவு எண்: AP-ART-00004

விபரங்கள்

தற்போதைய தொழில்

கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்

வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை

11

நூல்களின் பெயர்கள்

1.அக்கினிச்சிறகாய் கவிதை 2.பக்திப்பாசுரங்கள் பக்திப்பாடல்கள் 3.நிலாச்சோறு மரபுக்கவிதை 4.வேலியே பயிரை மேய்ந்தது சிறுகதை 5.நந்திக்கடலே மரபுக்கவிதை 6.உருவமில்லா ஒன்று சிறுகதை 7.வண்ணச்சிட்டுக்கள் சிறுவர்பாடல் 8.பக்தியால் யானுனை பக்திப்பாடல்கள் 9.ஆலயலயம் பக்திப்பாடல்கள் 10.கிராமிய விளையாட்டுக்கள் தொகுப்பு 11பாரம்பரிய உணவுகலாசாரம் தொகுப்பு

பெற்ற விருதுகள்

இளைங்கலைஞர் விருது சாதனைப்பெண் விருது

சுய அறிமுகம்

ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கினை பிப்பிடமாக கொண்ட ரஜிதா அரிச்சந்திரன் (திருமதி.#ரஜிதா #கமலதாஸ்) அவர்கள் ஓர்பன்முக படைப்பாளுமை என்பதுடன் ஓர்கலைப்பட்டதாரியாகவும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் திகழ்வதும்குறிப்பிட தக்கதாகும். சிறுவயது முதலே கலைமீதில் கொண்டிருந்த காதலால் கவிதைகளை படைத்து வந்தார். இவரது படைப்புக்கள் சமூகத்தில் புரையோடியுள்ள மூடநம்பிக்கைகள் அவலங்கள் சிறுவர்களுக்கான பாதிப்புக்களை சுட்டுவனவாகவும் சிறுவர்களை சமூகத்தை நன்நெறிக்கு இட்டுச்செல்வ னவாகவும் இருக்கின்றன. இவரது நவீன கவிதைகள் 2021இல் முதல் முதலாக அக்கினிச்சிறகாய் என்றகவிதை தொகுப்பாக வெளி வந்தது. அதனை தொடர்ந்து. இவரது மரபு கவிதைகள் நிலாச்சோறு என்னும்தொகுப்பாகவும் 2022 இலும் அடுத்து நந்திக்கடலே தொகுப்பாகவும் 2024 இலும் வெளிவந்தது. இவரது சிறுகதைகளில் வேலியே பயிரை மேய்ந்தது 2024 இல் முத்தமிழ்ச்சங்க வெளியீடாகவும் 2025இல் உருவமில்லா ஒன்று ஜீவநதி வெளியீடாகவும் வெளிவந்தது. சிறுவர் மீதும் அவர்களின் எதிர்காலத்தின் மீதுஅளவற்ற ஆவலை கொண்டிருக்கும் இவரது வண்ணச்சிட்டுக்கள் என்னும் சிறுவர் பாடல் தொகுதி 2023இல்.வாலை அம்மன் சனசமூக நிலைய வெளியீடாக வெளிவந்து சிறுவர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இவரது சிறுவர் பாடல் இறுவெட்டு யாழ்மாவட்ட செயலக கலாசார பிரிவின் வெளியீடாக 2022இல் வெளிவந்தது. இவற்றை தொடர்ந்து பக்தியால் தான் பாரை வெல்லலாம் என்னும் சிந்தனை தெளிவு கண்ட இவரது பக்திப்பாசுரங்கள் 2021இலும் ஆலயலயம் ,பக்தியால் யானுனை என்ற இரு பனுவலும் ஜீவநதி வெளியீடாக 2026இலும் வெளிவந்தமையும் குறிப்பிட்டத்தக்கது. இவரால் தொகுக்கப்பட்ட கிராமிய விளையாட்டுக்கள்,பாரம்பரிய உணவுக்கலாசாரம் ,போன்ற தொகுப்பு நூல்கள் யாழ்ப்பாண பிரதேசசெயலக. வெளியீடாக வெளியிடப்பட்டது. யோகம் என்ற சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும். தமிழ் இலக்கியங்களில் சமூக அரசியல் பொருளாதார நிலை பன்னாட்டு ஆய்வுக்கருத்தரங்க மாநாட்டு மலரின் பதிப்பாசிரியர்களில் ஒருவராகவும் செயற்பட்டுள்ளமையும் சிறப்பாகும். தமிழாராய்ச்சி மாநாடுகளில் கலந்து கொண்டு சிறந்த ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து வருவதும் குறிப்பாக யாழ்பல்கலைக்கழகம், மலேசிய மலாய் பல்கலைகழகம் போன்ற ஆய்வு மாநாடுகளில் கட்டுரை வாசித்துபாராட்ட பட்டதும்விசேடமாகும். இவை தவிர புத்தக விவரண நிகழ்ச்சிகளையும்சிறுவர்கதை களையும். மாணவர்களுக்கு கவிதை பயிலரங்கையும் டான் தொலைக்காட்சி ஊடாக நடாத்தி வருவதும் காற்றுவெளி,உதயன்,ஜீவநதி,இசைஆரம் சிறுகதைமஞ்சரி,கலசம்,யோகம், தினக்குரல் போன்ற பத்திரிகைகளிலும் தன் எழுத்துக்களூடாக தமிழ்ப்பணி ஆற்றிவரும் இவர்சர்வதேச மரபு கவிதை போட்டிகளில் முதலிடம் பெற்றும் பல கவியரங்கங்களில் கவிதைகளை பாடியும் வருகின்றார். இவரது எழுத்துப்பணிகளுக்காக நல்லூர் கலாசார பேரவை இளங்கலைஞர் விருதினையும் நல்லூர் பிரதேசசபை சாதனைப்பெண்விருதினையும் அளித்துள்ளனர்.

பதிவகத்திற்குத் திரும்புக