முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

நல்லையா சந்திரசேகரன்

இறத்தோட்டை, இறத்தோட்டை, மாத்தளை, இலங்கை

  • கவிஞர்
  • சிறுகதை எழுத்தாளர்
  • பாடலாசிரியர்

பதிவு எண்: AP-ART-00007

விபரங்கள்

சுய அறிமுகம்

பிறப்பு இறத்தோட்டை லோன்வில். ஆரம்ப கல்வி மா/ தமிழ் மகாவித்தியாலயம் (இன்றைய இந்து மகா வித்தியாலயம்). உயர் தரம் மாத்தளை சாஹிராக் கல்லூரி. முதல் அரச நியமனம் மாத்தளை வில்கமுவ பிரதேச செயலகம் கணக்கு பதிவாளர். பின் ஆசிரியர் நியமனம் மா/ மவுசாகல தமிழ் வித்தியாலயம். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மதன் சைட் ,கொட்டகலை. 2002 முதல் பதிலதிபர். 2012 முதல் அதிபர். பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா, மனித வள அபிவிருத்தி டிப்ளோமா, மாத்தளை மலரன்பன் அவர்களின் முன்னுரையோடு முடங்கி கிடக்கும் சிறுகதைகள். அத்தோடு படங்களுடன் கூடிய ஹைக்கூ கவிதைகள் கைவசம் உள்ளது. படைப்புகள் ஞானம் , ஜீவநதி, நீங்களும் எழுதலாம் , குன்றின் குரல், வீரகேசரி , தினக்குரல் , தினகரன், ஆயிரம் கவிஞர்கள் ஆயிரம் கவிதைகள் தொகுப்பு, சாயம் தோய்ந்த வரிகள் (மும்மொழி தொகுப்பு) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. மேலும் அரச ஊழியர்கள் ஆக்கத்திறன் போட்டியில் சிறுகதை, பாடலாக்கம் , போட்டியில் வெற்றி பெற்றவை அமைச்சு இதழில் வெளிவந்துள்ளன. புரவலர் ஹாசிம் உமர் அவர்களின் நூல் வெளியீட்டு உதவித் திட்டத்தில் ". சாயப்பட்ட விரல்கள்"". கவிதை தொகுதி வெளிவந்தது.

பதிவகத்திற்குத் திரும்புக