முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
துரைநாதன் சபீதன் அவர்களின் புகைப்படம்

துரைநாதன் சபீதன்

தங்கநகர், சேருவில, திருகோணமலை, இலங்கை

  • கவிஞர்
  • சிறுகதை எழுத்தாளர்
  • கட்டுரையாளர்
  • நாடகக் கலைஞர்
  • ஆய்வாளர்
  • இலக்கிய விமர்சகர்

பதிவு எண்: AP-ART-00008

விபரங்கள்

புனைபெயர்

துரை. சபீதன்

தற்போதைய தொழில்

நிர்வாக ஆசிரியர், கூத்தம்பலம் பன்னாட்டுப் பல்துறை ஆய்விதழ்

நூல்களின் பெயர்கள்

1. தமிழர் வரலாற்றில் கூத்தும் கூத்தர்களும்

அங்கம் வகிக்கும் அமைப்புகள்

கூத்தம்பலம் கலைப் பண்பாட்டு மையம்

சுய அறிமுகம்

நாடகத்துறையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் பயணித்து வரும் எனது கலை வாழ்வின் ஆணிவேர் சிறுவயது நினைவுகளே. எனது பத்தாவது வயதில், என் தாய் திருமதி துரைநாதன் உஷாநந்தினியின் நெறியாள்கையில் சித்திரை வருடப்பிறப்பு விழாவில் 'பழங்குடி வேடுவன்' பாத்திரத்தில் நடித்ததே முதல் மேடை வாய்ப்பாகும். தொடர்ந்து மெதடிஸ்த திருச்சபை நிகழ்வில் 'சாத்தான்' வேடமேற்று நடித்தது முதல், பாடசாலைக் காலத்தில் 'அபசுரம்' போன்ற நாடகங்களை நண்பர்களுடன் இணைந்து நெறியாள்கை செய்து மேடையேற்றியது வரை எனது ஆர்வம் விரிவடைந்தது. பல்கலைக்கழக வாழ்க்கை எனது கலைப் பயணத்தின் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவனத்தில் நாடகம் மற்றும் அரங்கியல் துறையில் நுண்கலைமாணி (B.F.A) பட்டப்படிப்பைத் தொடர்ந்தது, என்னை நடிகனாக மட்டுமன்றி ஒலி, மேடைப்பொருள், வேட உடை, ஒப்பனை மற்றும் விளம்பர வடிவமைப்பாளர் எனப் பன்முகத் தொழில்நுட்பக் கலைஞனாகவும் செதுக்கியது. வர்ணக்கோலங்கள், திக்கற்றவள், வழக்கு, கருவாச்சி, ஆசாடபூதி, சுபக்கம், மீட்பின் பயணம் உள்ளிட்ட பல நாடகங்களில் எனது பங்களிப்பை வழங்கியுள்ளேன். மேலும், கூத்தம்பலம் கலைப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து ஈழத்தின் மறைந்துபோன சூட்டுக்களம், வேதாள ஆட்டம் உள்ளிட்ட சுதேசக் கலைகள் குறித்து ஆய்வு செய்து பல்வேறு பன்னாட்டு ஆய்வரங்குகளிலும் இதழ்களிலும் கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன். தற்போது யூஜெனியோ பார்பா மற்றும் நிக்கோலா சவரேஸ் ஆகியோரின் நூலை 'அரங்க மானுடவியல் அகராதி: ஆற்றுகையாளரின் இரகசியக் கலை' எனத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறேன். கூத்தம்பலம் கலைப் பண்பாட்டு மையத்தின் பொருளாளராகவும், பன்னாட்டுப் பன்முக ஆய்விதழின் துணை ஆசிரியராகவும் செயற்படும் எனக்கு, கலை என்பது வெறும் பொழுதுபோக்கல்ல; அது எனது வாழ்வியலும் சமூகத்தை ஆற்றுப்படுத்தும் ஊடகமுமாகும். 17-11-2026 எழுதப்பட்டது.

இணையத்தளம்
https://koothampalam.com/
பிற சமூக வலைத்தளங்கள்

பதிவகத்திற்குத் திரும்புக