முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
பழனியாண்டி கனகராஜா அவர்களின் புகைப்படம்

பழனியாண்டி கனகராஜா

பசறை-காவத்தையூர், பசறை, பதுளை, இலங்கை

  • கவிஞர்
  • பாடலாசிரியர்
  • பாடகர்
  • இலக்கிய விமர்சகர்
  • நூல் வெளியீட்டாளர்
  • கலை இலக்கிய ஆர்வலர்

பதிவு எண்: AP-ART-00009

விபரங்கள்

புனைபெயர்

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

தற்போதைய தொழில்

தேயிலை தொழிற்சாலை உத்தியோகத்தர்,சமாதான நீதவான்

கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு

1998

வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை

3

நூல்களின் பெயர்கள்

1.எண்ணங்களின் வண்ணங்கள் 2.அருகம்புல்லில் பனித்துளிகள் 3.மலைத்தேன்

பெற்ற விருதுகள்

அரச கலைஞர் விருது-கலைச்சுடர் புதுமைக்கவி,எழுச்சிக்கவி, முத்தமிழ் ஹைக்கூ பேரொளி,ஹைக்கூ மின்னல்,கவிமணி, நிலாச்சுடர்,நிலவின் சுடரொளி,கவிமுகில், கவிவேந்தர்,கவித்தாமரை, பேரறிஞர் அண்ணா,ஔவைக்கனி, கவிநுட்பம்,தமிழ்ச்சுடர், கவித்தேனீ, ஸ்ரீ விக்கிர கீர்த்தி, சிறந்த எழுத்தாளர்

அங்கம் வகிக்கும் அமைப்புகள்

ஊவா தமிழ் இலக்கிய பேரவை,

முக்கிய சாதனைகள்

தேசிய கலைஞர் எனும் அங்கீகாரம் பெற்றமை மலையகத்தில் முதற்தடவையாக ஹைக்கூ மற்றும் லிமரைக்கூ நூல்களை வெளியிட்டமை தமிழக கவியுலக பூஞ்சோலை நான்காமாண்டு விழாவில் கவியரங்கத்தில் பங்கெடுத்து பேரறிஞர் மற்றும் கவிவேந்தர் விருது பெற்றமை. இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியம் கண்டியில் நடாத்திய "மலையகம் 200" நிகழ்வில் பங்கெடுத்து ஸ்ரீ விக்கிரம கீர்த்தி விருது-2024 பெற்றமை. 32 நாட்டு 1098 கவிஞர்கள் பங்கெடுத்து யாழ்ப்பாண மண்ணில் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியான ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள் எனும் பெருநூலில் இடம்பெற்றுள்ளமை. திருகோணமலை மூதூர் மண்ணில் JMI பதிப்பகம் நடாத்திய JMI EXPO 2026 நிகழ்வில் பங்கெடுத்து இலங்கை இலக்கிய வரலாற்றில் முதற்தடவையாக மலைத்தேன் எனும் லிமரைக்கூ நூலினை வெளியீடு செய்து சிறந்த எழுத்தாளருக்கான விருதினை பெற்றமை. எண்ணங்களின் வண்ணங்களின் எனும் கவிதைத்தொகுப்பு நூல் வெளியீட்டில் "மலைத்தேன்" எனும் சிறப்பு விருதினை பெற்றமை. கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நான்காவது உலக ஹைக்கூ மாநாட்டில் "அருகம்புல்லில் பனித்துளிகள்" எனும் ஹைக்கூ நூலை வெளியிட்டமை. ஆதவன் மற்றும் டான் தொலைக்காட்சிகளில் நேர்காணல் மற்றும் இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டமை. இன்னும் பல..........

சுய அறிமுகம்

இதில் எழில்மிகு கோணக்கலை காவத்தையை பிறப்பிடமாகவும் வசிப்படமாகவும் கொண்டபழனியாண்டி தங்கம்மா தம்பதிகளின் செல்வப்புதல்வராக 1979 பங்குனி 25 ஆம் நாள் பிறந்தேன்கல்விச்சாலை காலம் முதலில் கவிதை எழுதத் தொடங்கி ஆரம்பக் கல்வியை கோணக்கலை தேசிய பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை பதுளை பாரதி கல்லூரியிலும் பயன்றதன் பின்னர் 1998 முதல் தேயிலை தொழிற்சாலை உத்தியோகத்தராக கடமையாற்றி வருவதோடு சமாதான நீதவனாகவும்,தேசிய கலைஞராகவும் சேவை செய்து வருகின்றேன். கவிதை துறையில் மட்டுமல்லாது அறிவிப்பு நாடகம் சிறுகதை பாடல் விளையாட்டு மேடைப்பேச்சு வில்லுப்பாட்டு பாடல்களை ஏற்றுவது என பல கலை அம்சங்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டு கவிதை சிறுகதை அறிவிப்பு விவாதம் ஆகியவற்றில் பரிசில்களை ஈட்டி கொண்டேன்.2019 ஆம் ஆண்டு இலங்கை சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு நடாத்திய கலைஞர்களுக்கான அரச விருது விழாவில் கலைச்சுடர் எனும் விருதினை பெற்றுக் கொண்டேன். விசேடமாக முகநூல் குழுமங்களில் நடைபெறுகின்ற போட்டிகளில் பங்கெடுத்து பல பல சான்றிதழ்களையும் விருதுகளையும் பெற்றுள்ளேன்.

மின்னஞ்சல்

palaniyandykanagarajah7294@gmail.com

பதிவகத்திற்குத் திரும்புக