முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
லோகிதா தனுசன் அவர்களின் புகைப்படம்

லோகிதா தனுசன்

அன்புவழிபுரம், திருகோணமலை நகரமும் சூழலும், திருகோணமலை, இலங்கை

  • கவிஞர்
  • கட்டுரையாளர்
  • நாடகக் கலைஞர்
  • ஆய்வாளர்
  • நூல் வெளியீட்டாளர்
  • ஆவணப்படக் கலைஞர்
  • கலை இலக்கிய ஆர்வலர்

பதிவு எண்: AP-ART-00028

விபரங்கள்

கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு

2019

வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை

01

நூல்களின் பெயர்கள்

உன் மனதின் அற்புதம்

சுய அறிமுகம்

நான் லோகிதா தனுசன். ஒரு உளவியல் ஆய்வாளர், ஆலோசனை உளவியலாளர், மனநலப் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். பிரித்தானியாவில் (UK) உளவியல் மற்றும் ஆலோசனைத் துறையில் உயர் தேசிய டிப்ளோமா (HND) நிறைவு செய்துள்ள நான், தற்போது இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் உளவியல் சிறப்புப் பட்டப்படிப்பையும் (BSc Hons), அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தில் (Duke University) மருத்துவ நரம்பியல் (Medical Neuroscience) கற்கையையும் தொடர்ந்து வருகிறேன். "மனங்களை வலுப்படுத்தி, வாழ்க்கையை மாற்றுவோம்" என்ற உயரிய நோக்கோடு லோகிதா'ஸ் ஆரா – மனநல மற்றும் தனிமனித வளர்ச்சி மையம் (Logitha's Aura) மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான ஆரா அக்கடமி (Aura Academy) ஆகியவற்றின் நிறுவனர் மற்றும் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறேன். அத்துடன், ஶ்ரீ ஹயக்ரீவர் பிரின்டர்ஸ் நிறுவனத்தின் நிருவாகியாகவும் பணியாற்றி வருகிறேன். "உன் மனதின் அற்புதம்" எனும் உளவியல் மற்றும் சுயமுன்னேற்ற நூலின் ஆசிரியரான நான், லியோ, லயன்ஸ் மற்றும் ரோட்டராக்ட் ஆகிய சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து மனநல விழிப்புணர்வு மற்றும் இளையோர் தலைமைத்துவப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.

படைப்புகளின் இணைப்புகள்
மின்னஞ்சல்

logitha.aura@gmail.com

பதிவகத்திற்குத் திரும்புக