
செய்னுல் ஆப்தீன் நஸீரா
ஏறாவூர், ஏறாவூர் நகரம், மட்டக்களப்பு, இலங்கை
- கவிஞர்
- சிறுகதை எழுத்தாளர்
- கட்டுரையாளர்
- நூல் வெளியீட்டாளர்
- கலை இலக்கிய ஆர்வலர்
- ஏனையவை
பதிவு எண்: AP-ART-00031
விபரங்கள்
- புனைபெயர்
நஸீரா எஸ் ஆப்தீன்
- தற்போதைய தொழில்
ஓய்வுநிலைப் பிரதிக் கல்விப்பணிப்பாளர்
- கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு
1975
- வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை
09
- நூல்களின் பெயர்கள்
வெளியிடப்பட்ட நூல்கள் ---------------------------------- 1. ஹைக்கூவில் கரைவோமா? - 2020 (ஹைக்கூ பற்றிய ஆய்வும் மணிக்கூ அறிமுகமும்) 2. வானும் மண்ணும் நம் வசமே. . -2020 (தமிழகம் தாண்டி வெளிநாடொன்றில் (இலங்கையில்) வெளியிடப்பட்ட முதலாவது தன்முனைக் கவிதைகள் நூல்) 3. புத்தொளிக் கவிதைகள் -2021 (உலகக் கவிஞர்களின் புத்தொளிக் கவிதைகளும் கூம்புக் கவிதைகளும்) 4. பாரதிக்கு பதில் மடல் -2021 (புதுக் கவிதைகள் ) 5. மண்ணில் தவழும் விண்மீன்கள் - 2022 (உலகக் கவிஞர்களின் தன்முனைக் கவிதைகள் ) 6. மகுடம் சூடும் மணிக்கூகள் - 2022 (மணிக்கூ கவிதைகள்) 7. பெயர் பதிக்கும் தகைகள் - 2022 (ஏறாவூர் தகைகளின் வரலாறு) 8. வெண்பா கற்போம் வா. - 2024 (வெண்பா கற்பதற்கான படிமுறைகள்) 9. உள்ளங்கை நெல்மணிகள் (பல்வகைக் கவிதைகள் )
- பெற்ற விருதுகள்
மணிக்கூகவி விருது பேரறிஞர் அண்ணா விருது கவிமின்னல் விருது சந்தப்பாமணி விருது இரா. உதயணன் இலக்கிய விருது கலைத்தாரகை விருது வாழ்நாள் சாதனையாளர் விருது இலக்கிய வித்தகர் விருது
- அங்கம் வகிக்கும் அமைப்புகள்
* மட்டக்களப்பு தமிழ் சங்கம் * நாணல் கலை, இலக்கிய வட்டம் * மகளிர் நல ஆலோசனை மேம்பாட்டு மையம்.
- முக்கிய சாதனைகள்
உலக சாதனைப் பங்கேற்பாளர் சான்றிதழ்கள். 1. Universal Achcheivers Book of Record 2. Futer Kalaam's Book of Record 3. Raaba Book of Record 4. INKSOID Book of Record 5. Bucephalus International Book of Record
- சுய அறிமுகம்
இலங்கை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகரில் பிறந்தவர். மட்/ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை கற்றவர். 1982 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்று சுமார் 17 வருட காலம் ஆசிரியராகப் பணி புரிந்தவர். இலங்கை கல்வி நிருவாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 1999 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 20 வருடங்கள் பிரதிக் கல்விப்பணிப்பாளராகக் கடமை புரிந்து தனது 55 வது வயதில் கடமையிலிருந்து ஓய்வு பெற்றார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் தொலைக்கல்வி மூலம் தனது இளங்கலை மாணி(B. A ) பட்டப் படிப்பினையும் முதுகலைமாணி((M. A) பட்டப் படிப்பினையும் பூர்த்தி செய்தார்.

