
ஜலீலா முஸம்மில்
ஏறாவூர், ஏறாவூர், மட்டக்களப்பு, இலங்கை
- கவிஞர்
- சிறுகதை எழுத்தாளர்
- கட்டுரையாளர்
- பாடலாசிரியர்
- ஆய்வாளர்
- இலக்கிய விமர்சகர்
- மொழிபெயர்ப்பாளர்
- நூல் வெளியீட்டாளர்
- கலை இலக்கிய அமைப்பாளர்
- கலை இலக்கிய ஆர்வலர்
பதிவு எண்: AP-ART-00035
விபரங்கள்
- தற்போதைய தொழில்
வைத்திய அதிகாரி
- வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை
06
- நூல்களின் பெயர்கள்
சிறகு முளைத்த மீன் தூரிகை வரையும் மின்மினிகள் மஞ்சள் மாம்பூ ஒட்டகச்சிவிங்கி பொம்மை ஒரு குடம் கானல் நீர் சுவைத்து வைரம்
- பெற்ற விருதுகள்
இலங்கை அரச விருதுகள் 1)இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து ஏறாவூர் நகர பிரதேச செயலகம் நடாத்திய பிரதேசக் கலை இலக்கிய விழா மற்றும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில் (29/11/2022) கவிதை இலக்கியத்துக்காக "கலைத்தாரகை விருது" 2)கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடா வருடம் நடத்தப்பட்டுவரும் கிழக்கு மாகாண இலக்கிய விழாப்போட்டியில் 2023 ஆம் ஆண்டிற்கான தமிழிலக்கியத் துறை "இளம் கலைஞர் விருது" (இலங்கை அரச விருது) 3)கலைச்சுடர் /கலா விபூஷண லங்காபுத்ர தேசபந்து’ விருது- தேசிய கலை அரண், சர்வதேச பௌத்த சம்மேளனம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் அயலக/ தமிழ் நாடு விருதுகள் 1)மதுரை உலகத்தமிழ்ச்சங்கம், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம், இனிய நந்தவனம் மாத இதழ் இணைந்து நடாத்திய மூன்றாவது உலகத் தமிழ் ஹைக்கூ மாநாட்டில் "தூரிகை வரையும் மின்மினிகள்" ஹைக்கூ நூலுக்காக ஹைக்கூ பேரொளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். 2)தமிழ் தொண்டர் பைந்தமிழ் சங்கம் மற்றும் நிலாவட்டம் இலக்கிய அமைப்பு நிகழ்த்திய நூறு கவிஞர்கள் பத்தாயிரம் கவிதைகள் உலக சாதனை தொகுப்பு நூலான "கவித்தேனருவியில்" எனது பங்களிப்புக்காக தமிழ்த் தொண்டன் விருதும் 'நோபல் உலக சாதனை சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை. 3. இந்தியா - தமிழ்நாடு நூலேணி பதிப்பகமும் துளிப்பா வரலாற்று ஆவண இதழும் இணைந்து புதுச்சேரியில் சர்வதேச ஹைக்கூ மாநாட்டை (2024 ஜூன் 23) கத் துளிப்பா (ஹைக்கூ) மாநாட்டில் எனது"மஞ்சள் மாம்பூ" ஹைக்கூ கவிதை நூலும் வெளியீடு கண்டது.இம்மாநாடும் நூல் வெளியீடும் ஒரு சாதனை நிகழ்வாக "ஒல் இந்தியா புக் ஒவ் ரெக்கார்ட்ஸ்" (ALL INDIA BOOK OF RECORDS) இல் இடம்பிடித்துள்ளது. அந்த வகையில், அனைத்து கவிஞர்களுக்கும் 'ஒல் இந்தியா புக் ஒவ் ரெக்கார்ட்ஸ்' குழுவினரால் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டமை 4)தமிழ்த் தொண்டன் பைந்தமிழ்ச் சங்கம் மற்றும் நிலா வட்டம் இலக்கிய அமைப்பு இணைந்து நடத்திய "கவித்தேன் தூளி" எனும் (100 கவிஞர்கள் தலா 50 மழலை பாடல்கள்) ஐயாயிரம் மழலைப் பாடல்கள் கொண்ட ஒரே தொகுப்பு நூல் மற்றும் நூறு கவிஞர்களின் நூறு நூல்கள் வெளியீடு எனும் இரட்டை நோபல் உலக சாதனை நிகழ்வில் பங்கேற்பிற்காக கவி அருவி விருது மற்றும் தமிழ் நேசன் விருது 5)தமிழ்நாடு மதுரமொழிக் கவிச் சங்கத்தினால் இலுப்பை அறக்கட்டளை அனுசரணையுடன் நடாத்தப்பட்ட முப்பெரும் விழாவில் " தமிழ் வேள்" விருது(29/05/2022)
- சுய அறிமுகம்
இலங்கை நாட்டின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் கடந்த 17 வருடங்களாக வைத்திய அதிகாரியாக கடமை புரிந்து வருகிறேன்.மர்ஹும் U.H. முகம்மது,பௌசியா தம்பதியின் மூன்றாவது பிள்ளை. சிறு பராயம் முதலே வாசிப்பிலே ஆர்வம் கொண்டிருந்தேன்.மருத்துவக் கல்வியை கொழும்பு களனிப் பல்கலைக்கழகத்தின் றாகமை மருத்துவ பீடத்தில் கற்று முடித்தேன். தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றுகிறேன். மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு, மட்டக்களப்பு போதெல்லாம் வைத்தியசாலையில் இரத்த வங்கி, சந்திவெளி பிரதேச வைத்தியசாலை மாவடி வேம்பு பிரதேச வைத்தியசாலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகளில் கிட்டத்தட்ட 17 வருட சேவை அனுப்பவம் கொண்டிருக்கிறேன். விசேடமாக தேசிய இரத்தப் பரிமாற்ற சேவையில் ஐந்து வருடங்கள் சேவை அனுபவம் உண்டு.கல்வியிலே கண்ணாக இருந்து திறமையைக் காட்டினாலும் எழுத்துலகம் எனது இன்னொரு கண் என்றே சொல்லலாம். எழுத்தும் வாசிப்பும் நான் நேசிக்கும் துறைகள். கற்றலின் ஊடே ஆக்கங்கள் எழுதுவதை விட்டு விடவே முடியவில்லை. இலக்கியத் துறையில் கூடுதலான ஈடுபாட்டுடன் பயணித்து வருகிறேன்.எனது சொந்தப் பெயரிலேயே எழுதி வருகிறேன்.
- மின்னஞ்சல்
jaleelamuzammil@gmail.com
- தொலைபேசி
0771308495
0771308495
- Facebook இணைப்பு
- https://www.facebook.com/share/1FaCdEQzpM/
- பிற சமூக வலைத்தளங்கள்

