றம்ஸியா ஹம்ஸா அப்ஹாம்
தர்ஹா நகர், பேருவளை, களுத்துறை, இலங்கை
- கவிஞர்
- சிறுகதை எழுத்தாளர்
- கட்டுரையாளர்
- இலக்கிய விமர்சகர்
- கலை இலக்கிய ஆர்வலர்
பதிவு எண்: AP-ART-00038
விபரங்கள்
- கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு
2017
- பெற்ற விருதுகள்
அகில இலங்கை ரீதியாக ஆக்க இலக்கியப் பயணம்-2025 நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதை 3 ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
- சுய அறிமுகம்
ஆவணப் படுத்துவதற்காக சுயவிபரம் +++++++++++++++++++++++++++++ நான் மேல் மாகாணத்தின் பேருவளைப் பிரதேச, தர்ஹா நகரைப் பிறப்படமாகவும் கொழும்பில் கொலன்னாவையை வசிப்பிடமாகவும் கொண்ட றம்ஸியா ஹம்ஸா. நான் எனது ஆரம்பக் கல்வியை தர்ஹா நகர் அல்ஹம்ரா மகா வித்தியாலயத்திலும் ஆண்டு 6-13 வரை கலு/அலுத்கம் வீதிய முஸ்லிம் பெண்கள் மத்திய மகா வித்தியாலயத்திலும் (National Shcool) கற்றேன். முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பயிலுநராகவும் இலங்கை துறைமுக அதிகார சபையில் விஷேடதர இலிகிதராகவும் கடமையாற்றி சுயவிருப்பில் ஓய்வு (VRS) பெற்றேன். 2017முதல் றம்ஸியா அப்ஹாம் என்ற பெயரில் நாட்டு நடப்புக்களையும், சமூகப் பிரச்சினைகளையும் கட்டுரையாகத் தேசியப் பத்திரிகைகளுக்கு எழுதி வந்தேன். 2023ல் புதைகுழி என்னும் பெயரில், எனது முதலாவது சிறுகதை விடிவெள்ளிப் பத்திரிகையில் பிரசுரமானது. இதிலிருந்து றம்ஸியா ஹம்ஸா என்ற பெயரில் எனது சிறுகதைகள் தேசிய பத்திரிகைகளான தினகரன் வாரமஞ்சரி, ஞாயிறு தமிழன், ஞாயிறு தினக்குரல், மற்றும் ஜீவநதி, காற்றுவெளி, அவரி, முத்தமிழ் கலசம் மற்றும் சிறுகதை மஞ்சரி போன்ற சஞ்சிகைகளிலும் பிரசுரமாவதுடன், நூல் விமர்சனங்களும் தேசியப் பத்திரிகைகளில் பிரசுரமாகின்றன. எனது கவிதைகள் முத்தமிழ் கலசத்திலும் பிரசுரமாகின்றன. 2025ஆம் ஆண்டு அகில இலங்கை ஆக்க இலக்கிய சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதை மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. நான் பேருவளைப் பிரதேச எழுத்தாளர் ஒன்றியத்தின் செயற்குழுவிலும், ஸ்ரீலங்கா பென் கிளப்பின் கணக்காய்வாளராகவும் செயற்படுகிறேன்.
- மின்னஞ்சல்
rafham25@rocketmail.com

