முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
சித்தி ஹாஜறா கலீலுர் ரஹ்மான் அவர்களின் புகைப்படம்

சித்தி ஹாஜறா கலீலுர் ரஹ்மான்

காத்தான்குடி, காத்தான்குடி, மட்டக்களப்பு, இலங்கை

  • கவிஞர்
  • சிறுகதை எழுத்தாளர்
  • கட்டுரையாளர்
  • பாடலாசிரியர்
  • நூல் வெளியீட்டாளர்

பதிவு எண்: AP-ART-00039

விபரங்கள்

புனைபெயர்

காத்தான்குடி சிஹா

தற்போதைய தொழில்

ஓய்வு நிலை ஆசிரியர்

கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு

1990

வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை

2

நூல்களின் பெயர்கள்

1. கலங்கரை ( வழிகாட்டல் கட்டுரைகள்) 2. பூவாரம் ( சிறுவர் பாடல்கள்)

பெற்ற விருதுகள்

1. 2022 ம் ஆண்டு காத்தான்குடி காரிகை இலக்கிய கழகத்தினால் "கலைக் காரிகை" விருது 2. 2023ல் யாழிசை கவித்தடாகத்தின் "தன்முனைக் கவிக்கோ" விருது 3. 2025 ம் ஆண்டு பிரதேச கலாசார பேரவையினால் "கலைச் சுடர்" விருது

அங்கம் வகிக்கும் அமைப்புகள்

1. காத்தான்குடி "காரிகை" இலக்கிய கழகம் 2. SRI LANKA PEN CLUB

முக்கிய சாதனைகள்

2021 மாவட்ட மட்டம் சிறுவர் பாடல் 3ம் இடம் 2024 மாவட்ட மட்டம் சிறுவர் கதை 3ம் இடம் 2024 மாவட்ட மட்டம் மரபுக் கவிதை 1ம் இடம் 2024 தேசிய மட்டம் மரபுக் கவிதை 3ம் இடம்

சுய அறிமுகம்

கிழக்கு மாகாணத்தில் மீன் பாடும் தேனாடாம் மட்டுமாநகரின் காத்தான்குடி எனும் ஊரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஹாஜறா கலீலுர்ரஹ்மான் ஆகிய நான் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை மானி பட்டம் பெற்று வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியாக அரச ஆசிரியர் நியமனம் பெற்று கபொ.பொ. த சா/ தரம் ,க.பொ. உயர் தர வகுப்புகளுக்கு தமிழ், தமிழ் இலக்கிய நயம் பாடங்களைக் கற்பித்து 20 வருட சேவையின் பின்னர் சுய விருப்பத்தின் பேரில் ஓய்வு பெற்று தற்போது ஓய்வு நிலை ஆசிரியையாக இருக்கும் நிலையில் இலக்கிய துறையில் பன்முகப் படைப்பாளியாகவும் இருக்கிறேன். 1990 ம் ஆண்டு முதல் இலக்கிய துறையில் கால்பதித்து பின்னர் ஓரு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் எழுதி வருகின்றேன். எனது இலக்கிய பயணம் சிறுவர் இலக்கியம்,தொடர்கதைகள் சிறுகதைகள், புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள் கட்டுரைகள் என நீண்டு செல்கின்றது. எனது ஆக்கங்கள் தினகரன் , தமிழன், விடிவெள்ளி போன்ற வாராந்த தேசிய பத்திரிகைகளிலும் பல சஞ்சிகைகளிலும் மின்னிதழ்களிலும் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. கட்டுரை , கவிதை, சிறுகதை, பாடலாக்கம், சிறுவர் கதையாக்கம் சிறுவர் பாடலாக்கம் , போட்டிகளில் பங்குபற்றி பிரதேச, மாவட்ட , மாகாண, தேசிய மட்டங்களில் வெற்றி பெற்றுள்ளேன். *2024 ல் கலாசாரத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மரபுக் கவிதைப் போட்டியில் தேசிய மட்டத்தில் 3 ம் இடத்தையும் பெற்றுள்ளேன்* என்பதும் குறிப்பிடத்தக்கது. 2022 ம் ஆண்டு "கலங்கரை" எனும் நூலை வெளியிட்டுள்ளதுடன் அதே ஆண்டு வெளிவந்த பாரதிக் கண்ணா பாவலர் பூஞ்சோலை பதிப்பகத்தின் வெளியீடான 30 கவிஞர்களின் 150 கவிதைகள் உள்ளடக்கப்பட்ட கவிதை நூலான "சிதறிய விண்மீன் துண்டுகள்"எனும் நூலிலும் எனது 10 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 2026 ம் ஆண்டு " பூவாரம்" என்ற சிறுவர் பாடல் நூலையும் வெளியிட்டுள்ளேன். 2022 ம் ஆண்டு காத்தான்குடி காரிகை இலக்கிய கழகத்தினால் "கலைக் காரிகை" விருதும் 2023ல் யாழிசை கவித்தடாகத்தின் "தன்முனைக் கவிக்கோ" விருதும் பெற்றதோடு, 2025 ம் ஆண்டு பிரதேச கலாசார பேரவையினால் "கலைச் சுடர்" விருதும் பெற்றுள்ளதுடன் காத்தான்குடியில் மகளிர் கவியரங்கம் பலவற்றையும் தலைமையேற்று நடாத்தியுள்ளேன்.

Facebook இணைப்பு
https://www.facebook.com/share/1Tj4cDMQB7/

பதிவகத்திற்குத் திரும்புக