முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

முஜீப் ரஹ்மான் பாத்திமா ஸஞ்ஸீதா

புல்மோட்டை, குச்சவெளி, திருகோணமலை, இலங்கை

  • கவிஞர்
  • சிறுகதை எழுத்தாளர்
  • நாவலாசிரியர்
  • கட்டுரையாளர்
  • பாடலாசிரியர்
  • ஓவியர்
  • வில்லுப்பாட்டுக் கலைஞர்
  • ஆய்வாளர்
  • இலக்கிய விமர்சகர்
  • ஊடகவியலாளர்
  • நூல் வெளியீட்டாளர்
  • கலை இலக்கிய அமைப்பாளர்
  • கலை இலக்கிய ஆர்வலர்
  • ஏனையவை

பதிவு எண்: AP-ART-00040

விபரங்கள்

புனைபெயர்

கவிச்சாரல்

தற்போதைய தொழில்

உள்வாரி இளங்கலை மாணவி

கலைப்பணியை ஆரம்பித்த ஆண்டு

2016

வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை

2

நூல்களின் பெயர்கள்

பொற்கரம்(கவிதை) நான்கு சுவருக்குள் (நாவல்)

பெற்ற விருதுகள்

முன் மாதிரி மாணவி விருது, தினச்சுடர் தேசிய விருது (பல்துறை எழுத்தாளருக்கானது), சிறந்த தொகுப்பாளினி விருது, சாதனையாளர் விருது, கவிச்சுடர் விருது, சிறந்த நெறியாளர் விருது, SLPC Award , திறனொளி விருது

அங்கம் வகிக்கும் அமைப்புகள்

கவிச்சுடர் கலை மன்றம், புல்மோட்டை கலை இலக்கிய மன்றம்

முக்கிய சாதனைகள்

பல்துறை எழுத்தாளர், நாவலாசிரியர், நூலாசிரியர்,

சுய அறிமுகம்

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை எனும் கிராமத்தை பிறப்படமாகக் கொண்ட முஜீப் ரஹ்மான் றோஜினா தம்பதிகளின் இரண்டாம் மகளாய் 2001/11/24ஆம் திகதியன்று வந்துதித்தவரே பாத்திமா ஸஞ்ஸீதா . தன் தாயாரின் சொந்த ஊரான புல்மோட்டைக் கிராமத்தில் தன் பாலர் பருவம் முதல் இன்று வரை வசித்து வரும் இவர், சிறு வயது முதலே இலக்கிய உலகில் உலா வருபவர் . இவர் தி/புல்மோட்டை அறபாத் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் தரம் 9 முதல் சாதாரண தரம் வரை மூ/தோப்பூர்/ பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும் கல்வியைக் கற்று சித்தியெய்து அதனைத் தொடர்ந்து புத்தளம் இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி எனும் விருட்சத்தில் ஒழுக்கத்துடன் ஓயாத மார்க்கக் கல்வியையும் இவ்வுலகக் கல்வியையும் கற்று உயர்தரப் பரீட்சையின் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தற்பொழுது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை தொடர்ந்து வருகிறார். பள்ளிக் காலம் முதல் இலக்கிய உலகில் மிளிர்ந்த இவர்,பாலர் பாடசாலை முதல் பள்ளிக் காலம் முடியும் வரையான காலப் பகுதியில் பேச்சுப் போட்டிகள், கவிதை மன்றங்கள் பலதில் கலந்து கொண்டு பல சான்றிதழ்களையும் பரிசல்களையும் பெற்றுள்ளார். தனது பதினேழாவது வயதில் புத்தளம் இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் இணைந்தது முதல் இற்றை வரை எழுத்துப் பணியைத் தொடர்ந்து கொண்டே வருகின்றார். பள்ளிக்காலத்தில் சில நூல்களை நுகரத் தொடங்கியவர் இஸ்லாஹிய்யாவில் இணைந்தது முதல் பல நூல்களை அடிக்கடி நுகரத் தொடங்கி தனது பதினேழாவது வயதில் முதன் முதலாக இதர போட்டிக்காக அன்று வெளிவந்த அகரம் சஞ்சிகையின் படக்கவிதைப் போட்டியில் பங்கு பற்றி முதல் இடத்தை தட்டிக் கொண்டதில் பெருமகிழ்ச்சி. அன்று முதல் எழுத்தின் மீதான ஆர்வம் இவரை இன்னும் இன்னும் எழுதத் தூண்டி இன்று இரு நூல்களின் ஆசிரியராக தன்னை அடையாளம் காண வைத்திருக்கின்றது. இவர் இலக்கிய உலகிற்கு 1."பொற்கரம்" (2024)எனும் கவிதை நூலையும் 2."நான்கு சுவருக்குள்..." (அச்சுப் பதிப்பில் உள்ளது) எனும் நாவல் நூலையும் தந்துள்ளார். இவர் சாதனையாளர் விருது ,கவிச்சிகரம் விருது, சிறந்த நெறியாளர் விருது, சிறந்த தொகுப்பாளினி விருது ,திறனொளி விருது ,எஸ்.எல்.பி.சி அவார்ட், முன்மாதிரி மாணவி விருது, தினச்சுடர் தேசிய விருது போன்ற விருதுகளை பெற்று தன் எழுத்துப் பணியை தொடர்ந்து கொண்டு வருவதோடு கைப்பணி வேலைப்பாடுகள், சித்திரம் வரைதல், பேச்சாற்றல், விழிப்புணர்வு கதையாக்கம், நாடகம் இயற்றுதல், தொகுப்புக்களைத் திறம்படச் செய்தல் போன்ற பல் திறமைகளால் தன்னை இன்னும் அடையாளப்படுத்தியும் வருகின்றார். பல்துறை எழுத்தாளரான இவர் பத்திரிகைகள் சஞ்சிகைகள் வார இதழ்கள் மற்றும் பல ஆளுமைகளை இணைத்து வெளியிடப்படும் தொகுப்பு நூல்கள் பலவற்றிலும் முகநூல் வாயிலாகவும் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் கவிதை,கட்டுரை,நூல் வாசிப்பனுபவம், ஆளுமை நேர்காணல்,சிறுகதைகள் போன்றவற்றை எழுதி வருவதோடு தனது"கவிச்சாரல்" எனும் யூடியூப் தளத்தையும் இயக்கி வருகிறார். அரசு அங்கீகாரம் (பதிவு) பெற்ற ஸ்ரீ லங்கா பெண் க்ளப் இல் அரங்கேறும் சில நிகழ்ச்சிகளை திறம்பட வழி நடாத்தும் நெறியாளராகவும் திறனொளி கலை கலாசார வலையமைப்பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் திறனொளி கலை கலாசார வலையமைப்பினால் வெளியிடப்படும் திறனொளி சஞ்சகையின் துணை ஆசிரியராகவும் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் துணிந்தெழு சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆய்வு மன்றத்தின் உப தலைவராகவும் மற்றும் பல்கலைக்கழக மாணவர் தூதுவராகவும் இருந்து வருகின்றார்.

படைப்புகளின் இணைப்புகள்
காணொளி / ஒலி இணைப்புகள்
Facebook இணைப்பு
https://www.facebook.com/share/1FAo81vtje/
பிற சமூக வலைத்தளங்கள்

பதிவகத்திற்குத் திரும்புக