அன்பின் பாதை சமூகம்
அன்பின் வெளிப்பாடாக
வெள்ள அனர்த்ததில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இன்று...........
💞திரு திருமதி. பிரதீபன்💞
தம்பதிகளின் தவப்புதல்வன்
❤️ செல்வன் kohishan Pratheepan❤️ அவர்களின் ஐந்தாவது பிறந்தநாள் இன்று! இந்த இனிய நாளில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருகோணமலை மாவட்டம் சீனாக்குடா கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.
உங்கள் பிறந்தநாளை நீங்கள் கொண்டாடிய விதம், அனைவரின் மனதையும் தொட்டுவிட்டது. 150 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள், மதிய உணவு,மற்றும் சிற்றுண்டி வழங்கியதன் மூலம், நீங்கள் ஒரு சிறிய வயதிலேயே பெரிய மனதைக் கொண்டவர் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.
உங்களைப் போன்ற குழந்தைச் செல்வங்களின் கைகள் மூலம் உதவிகள் சென்றடைவது, அந்த உதவிகளுக்கு மேலும் வலிமையையும், அன்பையும் சேர்க்கிறது.
💞திரு திருமதி பிரதீபன் 💞 தொடர்ந்து தமது குழந்தைகளின் பிறந்தநாள் அன்பின் பாதை சமூகத்தின் ஊடாக மாணவர்களுடன் கொண்டாடுவது மட்டுமின்றி அவர்களுக்கு தேவையான சகல உதவிகளும் இன்று வரை செய்து கொண்டிருக்கும் இந்த தம்பதிகள் அவர்களின் குடும்பங்கள்,தொழில்கள் ஆசீர்வதிக்கப்பட்டு என்றும் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ அன்பின் பாதை சார்பாகவும்,உதவி பெற்றவர்கள் சார்பாகவும் நன்றிகளை வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கின்றோம்.
❤️செல்வன் kohishan Pratheepan❤️ அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் நன்றிகளும் உரித்தாகட்டும்.
என்றும் சீரும், சிறப்புடனும் நீங்கள் இன்னும் பல வெற்றிகளையும், மகிழ்ச்சியையும்,நல்ல ஆரோக்கியத்தையும் பெற்று வாழ வாழ்த்துகின்றோம்.
உங்கள் அன்பான, மற்றும் இரக்கம் உள்ள இதயம் மென்மேலும் வளரட்டும் உங்கள் கல்வி பயணமும்,எதிர்காலமும் சிறக்கட்டும் மீண்டும் ஒருமுறை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




