அன்பின் பாதை சமூகம் அன்பின் வெளிப்பாடாக இன்று......
கேகாலை மாவட்டம், எட்டியாந்தோட்டை, பனாவத்தை தோட்டத்தில் அமைந்துள்ள பனாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 162 மாணவர்களுக்கான குடிநீர் பிரச்சினையை தீர்க்க குடிநீர் கட்டமைப்பொன்றை பாடசாலையில் ஏற்படுத்த நீரை சேமிக்கும் டேங்க் ஒன்றும் அதிலிருந்து பைப் லைன்களை இணைப்பதற்கான ஏனைய மூலப்பொருட்களும் தேவைப்பட்டதால்..!
இந்த உதவியை செய்து தருமாறு கோரியதற்கிணங்க...
♦ஜெனீக்ஸ் செபஸ்தியான்♦ அவர்களின் செல்வ குழந்தைகளான
♥நிலவன்,மாலதி♥
அவர்களின் அன்பளிப்பாக
[சுவிஸ்] நாட்டைச் சேரந்தவர்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இல்லா இடத்தும் இயைந்த அளவில்
உள்ளஇடம் போல் பெரிதுவந்து
மெல்லக் கொடையோடு பட்ட குணனுடைய மாந்தர்க்குஅடைவார் ஆண்டைக்கதவு
பொருள் இல்லாத போதும் தம்மால் இயன்ற அளவு
பொருள் உள்ளது போல் மகிழ்ந்து இயல்பாகக்
கொடுக்கும் குணமுள்ள மக்களுக்கு மறுமை உலகக்
கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.
மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் ஏதோ ஒரு வகையில் பிறரிடம் உதவி பெற்றே வாழ்கின்றோம்.
எனவே உதவி செய்து வாழ்தல் இன்றியமையாதது ஆகும். உதவி செய்யாமல் சேர்த்து வைக்கும் பொருளால் பயன் ஏதும் விளைவதில்லை அந்தப்பொருள் வீணாகத்தான் அழியும்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
எமது தொப்புள்க்கொடி உறவுகள் கடல் கடந்து வாழ்ந்த போதிலும் எமது சொந்தங்களின் துயர் துடைக்க கரம் நீட்டியதை எண்ணி மகிழ்ச்சியடைவதோடு மிக்க நன்றிகளையும் எங்கள் சொந்தங்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் பல கரங்களை ஒன்று சேர்த்து பெறுமளவில் எம் சொந்தங்களின் துயர் தீர்க அரும்பணியாற்றிவரும்
அன்பின் பாதை சமூகம் நிர்வாக குழுவினருக்கும் எம் மனம் நிறைந்த நன்றிகள்.




