முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
அன்பின்பாதை – சமூகப் பணிகள்

அன்பின் பாதை சமூகம்

அன்பின் வெளிப்பாடாக இன்று.......
தி/மூ அம்மன் நகர் அம்பாள் வித்யாலயம் கட்டப்பறிச்சான் மூதூரில் கல்விப் பயிலும் 48 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாய்நிலத்து உறவுகளை

மறவாமல் நெஞ்சில் சுமக்கும் கனடாவில் வசிக்கும் தம்பி பெயர் குறிப்பிட விரும்பாத நலன் விரும்பி

அன்பின் பாதையூடாக இவ்வுதவிகள் வழங்கி வைத்தார்கள்..

கனடா நாட்டில் வசிக்கும் தங்களின் பிறந்தநாளை முன்னிட்டு, "அன்பின் பாதை" அமைப்பின் ஊடாக தி/மூ/அம்மன்நகர் அம்பாள் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 48 மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், அவர்களின் எதிர்கால நலன் கருதியும் கற்றல் உபகரணங்களையும் (கொப்பிகள்) தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டி வினாத்தாள் புத்தகங்களையும் வழங்கி உதவியமைக்கு பாடசாலை சார்பாகவும்,அன்பின் பாதை சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

​தங்களின் இந்த உயரிய ஈகைக் குணம் இப்பரீட்சைக்குத் தயாராகும் இந்த கிராமத்து மாணவர்களுக்குப் பெரும் ஊக்கமாகவும், அவர்களின் கல்விப் பயணத்திற்குப் பலமாகவும் அமைந்துள்ளது.

பிள்ளைகளின் கல்விக்காகத் தாங்கள் நீட்டிய இந்த உதவிக்கரம் என்றும் எமது நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்.

​இப்புனிதமான நன்னாளில் பிறந்தநாளைக் கொண்டாடும் தாங்கள் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று, நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாகவும்,

அன்பின் பாதை சார்பாகவும் இறைவனைப் பிரார்த்தித்து எமது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும், நன்றிகளையும் சமர்ப்பிக்கின்றோம்.

​இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தம்பி

​இறைவருள் என்றும் துணை நிற்கட்டும்.

​நன்றி.

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • 15 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "அன்பின் பாதை" மற்றும் "எண்ணம் போல் வாழ்க்கை" கலை இலக்கிய மன்றத்தின் சார்பில், மாணவர்களின் திறமைகளை…

    ஊக்கப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட (23.09.2026) போட்டிகளின் பரிசளிப்பு விழா திருகோணமலை மெதடிஸ்த…

    மேலும் வாசிக்க →
  • 5 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    அன்பின் பாதை சமூகம்

    அன்பின் வெளிப்பாடாக இன்று........ ​மனிதநேயம் எல்லைகளைக் கடந்தது என்பதை மீண்டும் ஒருமுறை மெய்பிக்கும் வகையில் , "அன்பின் பாதை" சமூக அமைப்பின் ஊடாகவும் "சத்தியம் வாழும் போதே…

    மேலும் வாசிக்க →
  • 3 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    அன்பின் பாதை சமூகம்

    அன்பின் வெளிப்பாடாக இன்று...... ஒரு மாணவியின் கல்வி பிரகாசிக்கக் கரங்கொடுத்த நியூஜெர்சி அமெரிக்காவில் வசிக்கும் ❤️திரு திருமதி பவிதா சிவசுதன்❤️ அவர்களுக்கு எமது மனமார்ந்த…

    மேலும் வாசிக்க →