அன்பின் பாதை சமூகம்
அன்பின் வெளிப்பாடாக.......
திருகோணமலையில்
தி/ மூ/ பட்டி திடல் மகா வித்தியாலயம் மற்றும் தி/ உவர்மலை விவேகானந்தா கல்லூரி
பாடசாலை ஐந்து மாணவர்களுக்கு காலணிகள் வழங்கப்பட்டது.
இவ்வுதவிக்கு கரம் கொடுத்த கனடா நாட்டில் வசிக்கும்
💗 செல்வி.Rashmika Rajkumar
மற்றும் திரு. Rajkumar sivasuntharam
எமது மனம் நிறைந்த நன்றிகள்.
ஒரே நாளில் பூத்த இரு மலர்கள்!
❤️தந்தை இராஜ்குமார் சிவசுந்தரம்❤️
அவர் வழி வந்த
❤️செல்வி.மகள் ரஷ்மிகா❤️
இருவர் பிறந்தநாளும் இணைந்தே வந்ததே.....
இது
இயற்கை தந்த இனிய வரமல்லவா
ஆடம்பரக் கொண்டாட்டம் தவிர்த்து இங்கே
அன்பையே பெருஞ்சொத்தாய் விதைக்கின்றார்.
வாடும் ஏழை மாணவர் கண்ணீரைத் துடைத்து,
கல்விப் பாதையில் காலணிகள் அணிவிக்கின்றார்.
பொருளாதார நெருக்கடிச் சூழலிலும் உங்கள்
பெருந்தன்மை குறையாமல் ஒளிருகின்றது.
மிதிக்கும் கால்களுக்கு நீங்கள் தந்த காலணி,
நாளை அவர்கள் சிகரம் தொட வழிவகுக்கும்.
கல்வி எனும் அழியாச் சொத்தை எம்
சந்ததிக்குச் சேர்க்கத் துடிக்கும் இதயங்களே
'அன்பின் பாதை' சமூகத்தின் ஊடாக நீங்கள் செய்த
இந்த அறப்பணி என்றும் நிலைத்து நிற்கும்!
வாழ்வாங்கு வாழ்க.
வையகம் போற்ற வாழ்க
கல்விக் கண் திறக்கக் கரம் கொடுத்த நீங்கள்,
பல்லாண்டு காலம் நோயின்றி, குறையின்றி,
நிம்மதியாய் வாழ இறைவனை வேண்டுகிறோம்.
பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மனமார்ந்த நன்றிகள்.




