முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
அன்பின்பாதை – சமூகப் பணிகள்

அன்பின்பாதை - உதவிக்கரம்.

அன்பின் பாதை சமூகம்
அன்பின் வெளிப்பாடாக........

யாழ் நாவந்துறையில் படுத்த படுக்கையாக இருக்கும் தாய்க்கும், அவரைக் காப்பாற்றப் போராடும் இரண்டு இளம் பெண் பிள்ளைகளுக்கும் நாம் முன்னர் வெளியிட்ட வேண்டுகோள் பதிவைக் கண்டு, தாமதிக்காமல் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ள பெல்ஜியம் நாட்டில் வசிக்கும்

❤️திரு. திருமதி சிவா குமுதா❤️ தம்பதிகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கஷ்டத்தின் பிடியில் தவிக்கும் அந்தக் குடும்பத்தின் மாதாந்த நிதி உதவியைத் தாங்களே ஏற்றுக்கொண்டு
, "அன்பின் பாதை சமூகம்" அமைப்பின் ஊடாக நேரடியாக அவர்களின் கரங்களுக்குப் போய்ச் சேர ஏற்பாடு செய்திருப்பது உண்மையிலேயே போற்றுதலுக்குரியது.

அந்தத் தாயின் மருத்துவத் தேவைகளுக்கும் நிம்மதிக்கும் ஒரு பெரும் ஆறுதலாக இந்த மாதாந்த உதவிஅமையும்

சாதாரண தரம் (O/L) மற்றும் 7ஆம் ஆண்டு படிக்கும் அந்த இரண்டு பிஞ்சுகளின் கல்விக்கும், எதிர்காலக் கனவுகளுக்கும் புதிய வெளிச்சத்தைத் தரும்.

துயரத்தில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு நீங்கள் நீட்டிய இந்தக் கரம், அவர்களின் வாழ்வில் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. உங்கள் குடும்பத்தினருக்கு எல்லா வளங்களும், நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

உதவியை உரியவர்களிடம் நேர்மையாகக் கொண்டு சேர்க்கும்
"அன்பின் பாதை சமூகத்தின் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன் கெவின் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • 3 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "கல்விக்கு கரம்கொடுப்போம்"

    யாழ்ப்பாணம். கல்வி மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் வல்லமை கொண்டது. ஆனால், அந்த ஏணியில் ஏற முற்படும் பல ஏழை மாணவர்களின் பாதங்களை வறுமை முட்களாகக் குத்துவதுண்டு.…

    மேலும் வாசிக்க →
  • 8 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "கல்விக்கு கரங்கொடுப்போம்" கா.பொ.த.(சா.த) இலவச கருத்தரங்கு.

    இன்று (06.11.2026) தி/தி/புனித சூசையப்பர் கல்லூரியில் அன்பின் பாதை அமைப்பினால் தொடர்ச்சியாக நடாத்தப்படும் கல்விக்கு கரங்கொடுப்போம்…

    மேலும் வாசிக்க →
  • 10 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    கல்விக்கு கரம் கொடுப்போம். கா.பொ.த(சா.த) மாணவர்களுக்கான செயலமர்வு.

    இன்று (05.11.2026) தி/சாம்பல்தீவு மகா வித்தியாலயத்தில் அன்பின் பாதை அமைப்பினால் தொடர்ச்சியாக நடைபெறும் கல்விக்கு கரங்கொடுப்போம்…

    மேலும் வாசிக்க →