முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
அன்பின்பாதை – சமூகப் பணிகள்

அன்பின் பாதை சமூகம்

அன்பின் வெளிப்பாடாக
பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது

பட்டித்திடல் மூதூர் மாணவர்களுக்கு பாடசாலை பைகள் வழங்கப்பட உள்ளது.
மாணவர்களிடம் கையளிக்கும் புகைப்படங்கள் மிக விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

இலவசமாக பெறுகின்றோம் என்கின்ற மன நிலை இல்லாமல் போட்டிகள் வைக்கப்பட்டு அதில் பங்குப்பற்றிய மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் பகுதி பகுதியாக அன்பளிப்பாக பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படுகின்றது.

யார் ஒருவர் மற்றவர் கண்ணீரைத் துடைக்கிறாரோ, அவரே உண்மையான மானுடம் அறிந்தவர்" என்பார்கள்.
அந்த வகையில், தாயகத்து மாணவர்களின் கல்விப் பசி அறிந்து, லண்டன் மாநகரில் இருந்து கொண்டு தம் அன்புக் கரங்களை நீட்டியிருக்கும்

❤️உயர்திரு. Uthaya Sureshkanth ❤️ அவர்களின் செயல் போற்றுதலுக்குரியது.

​

​கடல் கடந்து வாழ்ந்தாலும் உங்கள்

கண்ணியம் குறையவில்லை!

புலம் பெயர்ந்து நின்றாலும் உங்கள்

புன்னகை மாறவில்லை!

"'நாற்பத்து மூன்று'

மலர்களுக்கு நீங்கள்

நம்பிக்கை உரமிட்டீர்கள்.

பாடசாலைப் பைகளும் ,கொப்பிகளும் நீங்கள்

பயின்ற வித்தையின் வெளிப்பாடாய்!

​அன்பின் பாதையில் நீங்கள் நடந்தீர்கள் இன்று
அறிவுப் பாதையைத் திறந்து வைத்தீர்கள்!

வாழ்க உங்கள் கொடைத்திறம் என்றும்

வளர்க உங்கள் புகழ் மணம்!

​நற்பணியின் நாயகன் நீங்கள்.

​43 மாணவர்களுக்குத் தேவையான பாடசாலைப் கொப்பிகள் 16 மாணவர்களுக்கு தேவையான புத்தகப் பைகள் வழங்க முன்வந்த
❤️திரு.Uthayakumaran sureshkanth❤️

அவர்களின் இந்த உதவி, வெறும் பொருள் உதவி அல்ல.

இது அந்த மாணவர்களின் எதிர்காலத்தின் மீதான முதலீடு.

​ஒரு மாணவனுக்குக் கொடுக்கப்படும் பேனாவும் புத்தகமும், ஒரு சமூகத்தையே முன்னேற்றும் வலிமை கொண்டது.

தூர தேசத்தில் வாழ்ந்தாலும், தனது வேர்களை மறக்காமல், வளரும் தலைமுறைக்காக அவர் காட்டியிருக்கும் இந்த "அன்பின் பாதை" அறக்கட்டளையின் ஊடான உதவி மற்றவர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.
​வாழ்த்துக்கள்.

தம்மால் பயன் பெற்ற மாணவர்களின் புன்னகையில் வாழும்

❤️திரு. Uthayakumaran sureshkanth❤️

அவர்கள், அவர்களின் குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று, நீடுழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம். உங்களின் இத்தகைய சமூகப் பணிகள் தொடர எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • 3 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "கல்விக்கு கரம்கொடுப்போம்"

    யாழ்ப்பாணம். கல்வி மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் வல்லமை கொண்டது. ஆனால், அந்த ஏணியில் ஏற முற்படும் பல ஏழை மாணவர்களின் பாதங்களை வறுமை முட்களாகக் குத்துவதுண்டு.…

    மேலும் வாசிக்க →
  • 8 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "கல்விக்கு கரங்கொடுப்போம்" கா.பொ.த.(சா.த) இலவச கருத்தரங்கு.

    இன்று (06.11.2026) தி/தி/புனித சூசையப்பர் கல்லூரியில் அன்பின் பாதை அமைப்பினால் தொடர்ச்சியாக நடாத்தப்படும் கல்விக்கு கரங்கொடுப்போம்…

    மேலும் வாசிக்க →
  • 10 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    கல்விக்கு கரம் கொடுப்போம். கா.பொ.த(சா.த) மாணவர்களுக்கான செயலமர்வு.

    இன்று (05.11.2026) தி/சாம்பல்தீவு மகா வித்தியாலயத்தில் அன்பின் பாதை அமைப்பினால் தொடர்ச்சியாக நடைபெறும் கல்விக்கு கரங்கொடுப்போம்…

    மேலும் வாசிக்க →