பாடசாலை உபகரணங்களின் விலையேற்றத்தால் பெற்றோர்களின் நிலை கவலைக்குரியதே.......
புலம் பெயர் உறவுகளிடம் இவ் உதவிக்கு கரம் கொடுக்கும்படி கேட்கின்றோம்.
பொருளாதார நெருக்கடிகள் எம்மை வாட்டுகின்றன.
கல்விக்கு கரம் கொடுப்போம்.
கல்வியற்ற சமூகம் உருவாகி விடுமோ என்ற அச்சம் பல பெற்றோரை வாட்டுகின்றது.
"நல்லவர் தொடர்பினால் பற்றுமே விலகும் பற்றின்மை வந்தால் மயக்கமே கலையும் மயக்கமே நீங்கிட மெய்யே புரியும், மெய்யினை உணர்ந்தால் பேரின்பம் காண்பாய் "
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்று நன்று உள்ளக் கெடும்.
முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
அன்பின் உறவுகளே உங்கள் பிறந்தநாள் ,திருமணநாள், மற்றும் ஆண்டு நினைவு நாள். போன்ற நிகழ்வுகளை ஆதரவற்றோர் ,பாடசாலை மாணவர்கள் , பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என இவ்வுதவிகளை கருணை உணர்வோடும் இன்முகத்துடனும் உதவிடலாம்.




