முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
அன்பின்பாதை – சமூகப் பணிகள்

மிக விரைவில் மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள், உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு புகைப்படங்கள்…

மிக விரைவில் மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள், உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு புகைப்படங்கள் பதிவேற்றப்படும்.

அன்பின் வெளிச்சம் அபிவாணனின் பிறந்தநாள் நற்பணி
​அன்பின் பாதை சமூகம் என்றும் அறத்தின் வழியில் பயணிப்பது. அந்தப் பாதையில் இன்று அவுஸ்திரேலிய மண்ணில் வாழ்ந்தாலும், தன் வேர்களை மறக்காமல் ஈழத்து மண்ணின் பிள்ளைகளுக்காக இதயம் திறந்திருக்கும்

♥ திரு. செல்வ ரூபன் - திருமதி. தர்ஷா♥ தம்பதியினரின்

♥செல்வப் புதல்வன் அபிவாணன்♥

தனது மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

​"தான் மட்டும் வாழ்வதல்ல வாழ்க்கை
தன்னைச் சூழ்ந்திருப்பவர்களும் நலமாய் வாழ வேண்டும்"

என்கிற உன்னத எண்ணமே ஒரு மனிதனைத் தியாகச் செம்மலாக மாற்றுகிறது.

♥திரு. செல்வ ரூபன்♥

அவர்கள், நட்பிற்கு இலக்கணமாய், நலிந்தவருக்குக் கரம் கொடுக்கும் தோழனாய் விளங்குபவர்.

தாயக உறவுகளின் துயரைத் தன் துயராகக் கருதி, அவர்களின் சுமைகளைத் தாங்கும் ஒரு பெரும் தூணாக அவர் திகழ்கிறார்.

♥​புதல்வன் அபிவாணன்♥
பிறந்தநாள் மகிழ்வை, ஆடம்பரக் கொண்டாட்டங்களில் தேடாமல், திருகோணமலை,மூதூர் ,இலுப்கை்குளம்,

பனிச்சங்கேணி, பாலையூற்று

மற்றும் திரியாய் பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் முகங்களில் அவர் தேடியுள்ளார்.

கற்றல் சாதனங்கள் வழங்கப்பட்டு மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு உரமூட்டப்பட்டுள்ளது.
கல்வி மட்டுமல்லாது, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர் தொடர்ந்து கரம் கொடுத்து வருகிறார்.

​

​அன்புப் பயிர் வளர்க்கும்

♥செல்வன் அபிவாணன்♥

​கடல் கடந்து வாழ்ந்தாலும் கசிந்துருகும் உள்ளம். உங்கள் தாயக உறவுகளின் தாகம் தீர்க்கும் வெள்ளம்.

♦செல்வ ரூபன்♦

எனும் தியாகத்தின் நிழலில் இன்று

சிங்காரப் புன்னகையுடன் ஜொலிக்கும்

♥செல்வன் அபிவாணன்♥

​அகத்தின் அழகு முகத்தில் தெரிய தந்தை

குணத்தின் நிழலில் குட்டி மகன் வளர

மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தே - நீங்கள்

முத்தமிட்டாய் ஏழை மாணவர் தம் கல்வியை

​திருகோணமலை ,மூதூர் மண்ணும் திரியாய் நிலமும் - இன்று

உன் பெயரால் காகிதக் கொப்பிகள் மணக்கும்!

கணவரின் தர்மத்திற்குத் துணையாய் நிற்கும் -

♦அன்னை தர்ஷாவின்♦

அரவணைப்பில் அன்பு என்றும் நிலைக்கும்!

​வாழ்க பல்லாண்டு! வளர்க உங்கள் தொண்டு!

♥செல்வன் அபிவாணன்♥
பெயரால் அறம் இங்கு வெல்லட்டும்!

புன்னகை மாறாப் பிள்ளையாய் நீ - என்றும்

மண்ணின் துயர் துடைக்கும் மாமணியாய் திகழ்க!

​அன்பின் பாதை சமூகத்தின் சார்பில்,

பிறருடைய துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதி கல்விக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் ஓயாது உழைக்கும்

♦ திரு. செல்வ ரூபன்♦ அவர்களின் வழியில்,

♥மகன் செல்வன் அபிவாணன்♥ எல்லாச் செல்வங்களும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகின்றோம்.

​இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ♥அபிவாணன்♥

அன்பின் பாதை சமூகம் பணிப்பாளர்
றொசில்டா அன்டோ

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • 3 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "கல்விக்கு கரம்கொடுப்போம்"

    யாழ்ப்பாணம். கல்வி மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் வல்லமை கொண்டது. ஆனால், அந்த ஏணியில் ஏற முற்படும் பல ஏழை மாணவர்களின் பாதங்களை வறுமை முட்களாகக் குத்துவதுண்டு.…

    மேலும் வாசிக்க →
  • 8 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "கல்விக்கு கரங்கொடுப்போம்" கா.பொ.த.(சா.த) இலவச கருத்தரங்கு.

    இன்று (06.11.2026) தி/தி/புனித சூசையப்பர் கல்லூரியில் அன்பின் பாதை அமைப்பினால் தொடர்ச்சியாக நடாத்தப்படும் கல்விக்கு கரங்கொடுப்போம்…

    மேலும் வாசிக்க →
  • 10 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    கல்விக்கு கரம் கொடுப்போம். கா.பொ.த(சா.த) மாணவர்களுக்கான செயலமர்வு.

    இன்று (05.11.2026) தி/சாம்பல்தீவு மகா வித்தியாலயத்தில் அன்பின் பாதை அமைப்பினால் தொடர்ச்சியாக நடைபெறும் கல்விக்கு கரங்கொடுப்போம்…

    மேலும் வாசிக்க →