"அன்பின் பாதை" மற்றும் "எண்ணம் போல் வாழ்க்கை" கலை இலக்கிய மன்றத்தின் சார்பில், மாணவர்களின் திறமைகளை…
"அன்பின் பாதை" மற்றும் "எண்ணம் போல் வாழ்க்கை" கலை இலக்கிய மன்றத்தின் சார்பில், மாணவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட (23.09.2026) போட்டிகளின் பரிசளிப்பு விழா திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் மிகச் சிறப்பாகவும் வெகுவிமரிசையாகவும் நடைபெற்றது.
இவ்விழா இனிதே நடைபெற லண்டனில் வசிக்கும்
❤️செல்வி Anvika மற்றும்
❤️செல்வன் Ashvik❤️
ஆகியோரின் அன்பான பெற்றோர்கள் தாராள மனதுடன் நிதியுதவி வழங்கி அனுசரணை அளித்துள்ளனர்.
மேலும், கனடாவில் வாழும் பெயர் குறிப்பிட விரும்பாத நலன் விரும்பி ஒருவரும் திரு. தியா காண்டீபன் அவர்கள் மற்றும் Google Stores ஆகியோரும் மேலதிக அனுசரணையாளராக நின்று உதவி புரிந்துள்ளனர்.
கடல் கடந்து வாழ்ந்தாலும், தாய்நிலத்து மாணவர்களின் கல்வி மற்றும் கலைத் திறன்களை வளர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்பட்ட அந்த நல்நெஞ்சங்களுக்கு மன்றத்தின் சார்பிலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்தகைய அனுசரணைகள் மாணவர்களின் எதிர்காலத்திற்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமையும்.
இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற்ற மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எங்களது நல்வாழ்த்துகள்.
மேலும், இவ்விழா சிறக்க வருகை தந்து சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மன்றத்தின் சார்பில் எங்களது இதயப்பூர்வமான நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம்.
அன்பும் அறிவும் இணைந்த இந்த நற்பணி என்றும் தொடர இறைவனை வேண்டுகிறோம்.




