முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
அன்பின்பாதை – சமூகப் பணிகள்

அன்பின் பாதை சமூகம்

அன்பின் வெளிப்பாடாக இன்று......
ஒரு மாணவியின் கல்வி பிரகாசிக்கக் கரங்கொடுத்த நியூஜெர்சி அமெரிக்காவில் வசிக்கும்

❤️திரு திருமதி பவிதா சிவசுதன்❤️ அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.....

உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் கல்வி நடவடிக்கைக்கான தொலைபேசித் தேவையை அறிந்து,

'அன்பின் பாதை சமூகம்'

அமைப்பின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக விரைந்து வந்து இந்த அன்பளிப்பைச் செய்துள்ளீர்கள்.

கஷ்டமான சூழ்நிலையிலும் ஒரு மாணவியின் எதிர்காலக் கனவு தடைபட்டுவிடக் கூடாது என்பதில் நீங்கள் காட்டிய அக்கறையும், உடனடியாகக் கரம்பற்றிய வள்ளல் குணமும் போற்றுதலுக்குரியது.

ஒரு மாணவியின் படிப்பிற்கு உதவியதன் மூலம் அவரது பிரகாசமான எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் அமைத்துள்ளீர்கள்.

சூழ்நிலையின் அவசரத்தை உணர்ந்து காலம் தாழ்த்தாது உதவிய உங்கள் நல்மனம் நெகிழ வைக்கிறது.

உங்கள் குடும்பத்தினர் அனைவரும் எல்லாச் செல்வங்களும் எய்தி ஆரோக்கியத்துடனும்,மகிழ்ச்சியுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

உங்கள் அன்பும் நற்செயலும் தொடரட்டும்.

நன்றிகளுடன்

அன்பின் பாதை சமூகம்.

பணிப்பாளர்.

திருமதி.றொசில்டா அன்டனி

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • 15 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "அன்பின் பாதை" மற்றும் "எண்ணம் போல் வாழ்க்கை" கலை இலக்கிய மன்றத்தின் சார்பில், மாணவர்களின் திறமைகளை…

    ஊக்கப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட (23.09.2026) போட்டிகளின் பரிசளிப்பு விழா திருகோணமலை மெதடிஸ்த…

    மேலும் வாசிக்க →
  • 5 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    அன்பின் பாதை சமூகம்

    அன்பின் வெளிப்பாடாக இன்று........ ​மனிதநேயம் எல்லைகளைக் கடந்தது என்பதை மீண்டும் ஒருமுறை மெய்பிக்கும் வகையில் , "அன்பின் பாதை" சமூக அமைப்பின் ஊடாகவும் "சத்தியம் வாழும் போதே…

    மேலும் வாசிக்க →
  • 7 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    அன்பின் பாதை சமூகம்

    அன்பின் வெளிப்பாடாக இன்று....... தி/மூ அம்மன் நகர் அம்பாள் வித்யாலயம் கட்டப்பறிச்சான் மூதூரில் கல்விப் பயிலும் 48 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.…

    மேலும் வாசிக்க →