வாழ்வாதார உதவியாக
பெண் தலைமைத்துவ குடும்ப பெண்மணிகளுக்கு இரண்டு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
நயினை
சுவிஸ்
உயர்திரு முத்தையா நகுலேஸ்வரன்
அகவைத் திருநாள் வாழ்த்துகள்.
நயினையில் விளைந்த
செந்தரளம்.
அட்சய பாத்திரத்தை
கையிலேந்தி
ஆதரவற்றோர்களுக்கெல்லாம்
அள்ளி வழங்க வந்த
முத்தையா என்ற முதல்வன்
பெற்றெடுத்த
நகுலேஸ்வரனாம் நம்குலத்து
நல் மைந்தன் நீங்களய்யா.
சுவிஸில் வாழ்ந்தாலும்
சொந்த மண்ணை மறவாது
பிறந்த மண்ணின் பேரவலங்களை
அறிந்து கைகொடுக்க வந்த
எமது
உடன்பிறந்த சோதரனாய் நீங்கள்.
தாயக உறவுகளின் கண்ணீரைத் துடைத்து கலக்கத்தை அகற்றி
வாழ்வாதாரங்களை வழங்கியும்
ஏழை மாணவர்களின்
கல்வி முன்னேற்றத்திலும் கைகொடுத்து *மனிதாபிமான உதவித்திட்டம்*என்றதோர்
அமைப்பின் தலைவனாய்
பெருமைசேர்க்கும் பெருமகனே...!
அற்புதமான உங்கள்
தன்னலமற்ற சேவைகளால்
எமது மக்களி்ன் மனங்களிலே
நன்றிப் புன்னகை மலர்கின்றன.
என்றும் நீங்கள்
குன்றா இளமையும்
குறையா பல செல்வங்களும்
நன்றாய் பெற்று வாழ உங்கள்
அகவைத் திருநாளில் நாம்
வாழ்த்துகிறோம் ஐயா நீங்கள்
வாழியவே என்றென்றும்
இந்த வையகம் போற்ற வாழ்க..!
28:102024




