முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
அன்பின்பாதை – சமூகப் பணிகள்

அன்பின் பாதை சமூகம்

அன்பின் வெளிப்பாடாக இன்று........
​மனிதநேயம் எல்லைகளைக் கடந்தது என்பதை மீண்டும் ஒருமுறை மெய்பிக்கும் வகையில்

, "அன்பின் பாதை" சமூக அமைப்பின் ஊடாகவும் "சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம்" அமைப்பின் பங்களிப்புடனும் ஓர் உன்னதமான சமூகப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

​இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கப்பல்துறை கிராமத்தில் வாழும் மக்களுக்கு ஆடைகள் இலண்டனில் இருந்து

❤️திரு திருமதி. திருநீலகண்டன்❤️ தம்பதியினரால் அன்புடனும் பெருந்தன்மையுடனும் பெருமளவிலான ஆடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

​புலம்பெயர்ந்து வாழும் போதிலும் தாயகத்தின் கிராமப்புற மக்களின் வறுமையையும் தேவையையும் உணர்ந்து "சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம்" என்ற உயரிய தாரக மந்திரத்திற்கு அமைய வாழும் காலத்திலேயே மற்றவர்களுக்கு உதவிக்கரங்களை நீட்டியுள்ள

❤️திரு திருமதி திருநீலகண்டன்❤️ தம்பதிகள் மற்றும் சத்தியம் வாழும்போதே வழங்கிடுவோம் ஸ்தாபகர்

❤️திரு சத்தியமூர்த்தி ❤️

அவர்களதும் இந்த சேவை மிகவும் போற்றத்தக்கது.

இ​லண்டனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இந்த ஆடைகள்,

"அன்பின் பாதை" சமூக அமைப்பினால் அக்கிராமத்தில் வாழும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு மிக மரியாதையுடனும் அன்புடனும் வழங்கப்பட்டது..

​வறுமையின் பிடியில் வாழும் கிராமத்து மக்களின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான ஆடை உதவியை வழங்கி மகிழ்ந்த கொடைவள்ளல்கள்

திரு.திருமதி திருநீலகண்டன் தம்பதியினருக்கு

"சத்தியம் வாழும்போதே வழங்கிடுவோம்"அமைப்பினரும்

"அன்பின் பாதை" அமைப்பினரும் பயனடையவுள்ள கிராம மக்களின் சார்பாககவும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

​இவ்வாறான நற்பணிகள் தொடரவும், உதவிக்கரம் நீட்டிய அன்புள்ளங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அன்பின் பாதை சமூகம் பணிப்பாளர் றொசில்டா அன்டோ

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • 15 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    "அன்பின் பாதை" மற்றும் "எண்ணம் போல் வாழ்க்கை" கலை இலக்கிய மன்றத்தின் சார்பில், மாணவர்களின் திறமைகளை…

    ஊக்கப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட (23.09.2026) போட்டிகளின் பரிசளிப்பு விழா திருகோணமலை மெதடிஸ்த…

    மேலும் வாசிக்க →
  • 3 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    அன்பின் பாதை சமூகம்

    அன்பின் வெளிப்பாடாக இன்று...... ஒரு மாணவியின் கல்வி பிரகாசிக்கக் கரங்கொடுத்த நியூஜெர்சி அமெரிக்காவில் வசிக்கும் ❤️திரு திருமதி பவிதா சிவசுதன்❤️ அவர்களுக்கு எமது மனமார்ந்த…

    மேலும் வாசிக்க →
  • 7 படங்கள்
    அன்பின்பாதை – சமூகப் பணிகள்

    அன்பின் பாதை சமூகம்

    அன்பின் வெளிப்பாடாக இன்று....... தி/மூ அம்மன் நகர் அம்பாள் வித்யாலயம் கட்டப்பறிச்சான் மூதூரில் கல்விப் பயிலும் 48 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.…

    மேலும் வாசிக்க →