அன்பின் பாதை சமூகம்
அன்பின் வெளிப்பாடாக இன்று.......
அவுஸ்ரேலியாவில் வசிக்கும்
செல்வரூபன் கார்த்திக்கேசு தம்பதிகளின் ♥செல்வ புதல்வன் அபிவாணன்♥
அவர்களின் பிறந்தநாளின் தொடர்ச்சியாக தந்தையை இழந்த பெண் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது..
தியாக உணர்வுடனும் பரந்து பட்ட சிந்தனையுடன் புலத்தில் மிளிரும் ♥செல்வரூபன் கார்த்திகேசு♥
தம்பதிகள் பல்வேறு உதவித்திட்டங்களை அன்பின் பாதையூடாக வழங்கி வைக்கின்றனர்.
என்பது குறிப்பிடதக்கது தங்களது புதல்வனின் மகிழ்வான தருணமதில் திருகோணமலை மாவட்டத்தில் தொடர் உதவிகள் செய்கின்றார்கள்.
பொருளாதார சூழ்நிலை மட்டுமன்றி சீரற்ற காலநிலையாலும் பாதிக்கப்பட்டு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பலருக்கு கரம் கொடுத்து உதவும்
♥செல்வரூபன் தம்பதிகள் மற்றும் செல்ல மகன் அபிவாணன்♥
அவர்களுக்கும் உதவி பெறுவோர் சார்பில் நன்றிகள்.
புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற ஒரு சில உறவுகள் தங்களது உதவிக்கரங்களை பலப்படுத்துவதால் தாயகத்தில் உள்ள மக்கள் ஓரளவேனும் வறுமையிலிருந்து மீள்கின்றார்கள். அந்த வகையில் தான் மட்டும் வாழாமல் பிறரையும் வாழ வைக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் வழங்கிய இந் நிதிக்கொடையில் பயன்பெற்ற குடும்பம் சார்பாகவும் அன்பின் பாதை சமூகம் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் மேலும் அகவை காணும்
♥செல்வரூபன் அபிவாணன்♥
அவர்களுக்கு அனைவர் சார்பாகவும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.




