முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
எண்ணம்போல் வாழ்க்கை மாணவர் மன்றம்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு "அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை மாணவர் மன்றத்தின்" ஏற்பாட்டில்…

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு "அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை மாணவர் மன்றத்தின்" ஏற்பாட்டில் இன்று 03.10.2026 நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு எமது பொதிகை பணிமனையிலிருந்து பூக்களை ஏந்திய சிறார்களின் பவனி பூம்புகார் கிராம அலுலகம் நோக்கி சென்று மாலை 3:30 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பூம்புகார் கிராம உத்தியோகத்தர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர். கௌரவ அதிதியாக ஷெல்லிதாசன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.

திருகோணமலையின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சிறார்கள் அதிகமானோர் கலந்து சிறுவர் தினத்தை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு தன்னார்வத்துடன் தமது பிள்ளைகளை பங்கேற்க அழைத்துவந்த பெற்றோர்களுக்கு எமது மன்றத்தின் சார்பில் நன்றி.

மாணவர்களுக்கான தொடர் செயற்பாடுளில் தொடர்ந்தும் இணைந்திருக்குமாறு பெற்றோர்,ஆசிரியர்கள்,பாடசாலை சமூகத்தை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்