"கதைகேட்போம் கதைசொல்வோம்"
சங்கீதம் இணைய வானொலி தனது பிறந்தநாளை முன்னிட்டு திருகோணமலை மாணவர்களுடன் இணைந்து தனது கொண்டாட்ட நிகழ்வை மிகச் சிறப்பாக இன்று கொண்டாடினார்கள்.
சமூக சேவை என்பது வெறும் உதவிகளை வழங்குவது மட்டுமல்ல
மாறாக எதிர்கால சந்ததியினரின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பதும் அவர்களின் கல்வியை மேம்படுத்துவதுமாகும்.
அந்த உன்னத நோக்கத்தைச் செவ்வனே நிறைவேற்றி வரும்
சங்கீதம் இணைய வானொலி மற்றும் அன்பின் பாதை அமைப்பு இணைந்து நடத்திய அண்மைய நிகழ்வு சமூகப் பற்றுள்ள பலரின் உள்ளங்களை நெகிழச் செய்துள்ளது.
சங்கீதம் இணைய வானொலியின் பணிப்பாளர்R J. பிரபு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு வழக்கமான கொண்டாட்டங்களைத் தாண்டிச் சமூகத்திற்குப் பயனுள்ள நற்செயல்களால் சிறப்பிக்கப்பட்டது.
தனது பிறந்தநாளைச் சிறுவர்களுடன் இணைந்து கொண்டாடியதுடன் அவர்களுக்குத் தேவையான பரிசுகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கிச் சிறப்பித்தமை பலத்த பாராட்டுக்குரியது.
பரிசுப் பொருட்கள் வழங்குவதோடு நின்றுவிடாமல் மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக கதை கூறல் நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது.
இதில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு தங்களின் கதை சொல்லும் திறமையை வெளிப்படுத்தினர்.
சிறப்பு என்னவென்றால் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் இந்நிகழ்வில் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்துகொண்டு தங்களின் திறமைகளையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர்.
இது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையேயான பிணைப்பை மேலும் வலுப்படுத்தியது.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில்
அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் வாசிப்புத் பழக்கத்தை வளர்க்கும் விதமாகப் புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்பு
இந்நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில் பல துறைச் சார்ந்த ஆளுமைகளும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்
எழுத்தாளர் தேன்மொழி சபா
கவிஞர் செல்லிதாசன் ஐயா
அன்பின் பாதை எண்ணம் போல் நிர்வாக உறுப்பினர்கள்.
செல்வன். லோகிசன்
செல்வி.அபிநயா ரகுராம்
திருமதி.சரணியா ஜூட்
திருமதி காமிலா குரூஸ்
தலைவர் திரு.தீபகாந்தன்
இவர்களின் பிரசன்னம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாபெரும் ஊக்க சக்தியாக அமைந்தது.
சங்கீதம் இணைய வானொலியும், அன்பின் பாதை அமைப்பும் கைகோர்த்து இதுபோன்று பல சமூகப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. கல்வி கற்கும் மாணவர்களுக்குத் தொடர்ச்சியாகக் கல்வி உபகரணங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் தேவைகளையும் அறிந்து பூர்த்தி செய்து, எதிர்காலச் சமூகத்தை உருவாக்கும் உன்னத பணியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய தொண்டுள்ளங்கள் மேலும் பல சாதனைகளைப் படைத்து, சமூகத்திற்கு ஒளி சேர்க்க மனமார்ந்த வாழ்த்துகள்.




