வாசிப்புமாத பேச்சுப் போட்டி-2026 பரிசளிப்பு விழா.
அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தினால் திருகோணமலை மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியை நடத்தி இன்று சிறப்பாகப் பரிசளிப்பு விழாவையும் நடத்தியுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டமையும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கிண்ணம், பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டமையும் மாணவர்களின் எதிர்காலக் கனவுகளுக்குச் சிறந்த உரமாகியுள்ளது.
இன்றைய இனிய நாளில்
திரு. திருமதி. பிரதீபன் தம்பதிகளின் ❤️செல்லப் புதல்வன் கோகிஷன் பிரதீபன்❤️ (Kohishan Pratheepan)
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
சிறு வயதிலேயே சமூக சேவையிலும், பகிர்ந்துண்ணும் மாண்பிலும் அடிவைத்திருக்கும் இந்தச் சின்னஞ்சிறு பாலகனின் பிறந்தநாள், அன்பின் பாதைக்கு மற்றுமொரு அழகிய அடையாளமாக மாறியுள்ளது.
"சிறு வயதில் செம்மையாய்ப் பிறந்தநாள் கண்டாய்,
சமூக சேவைக்குச் சிறந்த வழிகண்டாய்!"
ஆறு வயதிலேயே அன்பும் இரக்கமும் கொண்டு மாணவர்களுக்கு உதவியும், அமுதளித்துப் பசியாற்றியும் நற்பணியில் இணைந்திருப்பது நெஞ்சம் நெகிழ வைக்கும் செயலாகும்.
பெற்றோரின் தியாகமும் நல்வழிகாட்டுதலும் இக்குழந்தையின் நற்பண்புகளில் எதிரொலிக்கின்றன. கல்விச் செல்வமும் கருணை உள்ளமும் என்றும் காத்து வழி நடத்தட்டும். வருங்காலம் வண்ணக் கோலமாகவும், வாழ்க்கைப் பயணம் என்றும் இன்பமாகவும், சீருடனும் சிறப்புடனும் அமைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்த அற்புதமான நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டு்ம்.
பேச்சுப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
பிள்ளைகளை ஊக்குவித்து உடன் நின்ற பெற்றோர்களுக்கும் நன்றி.
நிகழ்வை நேர்த்தியாக ஒருங்கிணைத்து நடத்திய அன்பின் பாதை நிர்வாகக் குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டும் நன்றியும்.
இறுதியாக அன்பின் பாதை சமூகத்தின் சார்பாகவும், பங்கேற்ற அனைவரின் சார்பாகவும்,
❤️ செல்வன் கோகிஷன் பிரதீபன்❤️ அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, இத்தகைய அன்பான நற்பணிகள் மென்மேலும் தொடர வாழ்த்துவோம்.




