நிறங்களுக்குள் ஒழிந்தோமா?? பிரியதர்ஷிணி
இவ்வாரம் மகுடம் சுடும் கவிதை
எண்ணற்ற ஆசைகளை இருட்டினில் புதைத்து விட்டு....
வண்ணமயமான வண்ணங்களில்
வசீகரமாய் தெரிகின்றோம்....
கருப்பு வெள்ளை சாயத்தைப் போர்த்திய வாழ்க்கைக்குள்...
கனவுகளின் நிறத்தை தேடுகின்றோம்....
நாட்டைக்காக்கும் வீர மங்கையாக வீர்கொண்டு புரப்பட்டார்கள்...
இன்று நாமோ உயிரைக்காக்க பச்சோந்தி வேசம் போடுகின்றோம்...
பூத்துக் குலுங்கும் பூவுக்கும் பாதுகாப்பு இல்லையே...
பிஞ்சி என்றும் பாராது கசக்கி வீசுகின்றனர்....
நாளுக்கு நாள் தற்கொலை அதிகரிக்கின்றது...
நினைவுகளின் நிறங்களுக்குள் நாமும் ஒளிந்து கொண்டுள்ளோம்...
இருளை அகற்றும் அகல் விளக்கும் இருட்டினில்தான் பிரகாசிக்கிறது....
ஏதும் அறியாத வண்ணத்துப்பூச்சியாய் பறந்தால் என்ன?? //
காலையில் பிறந்து மாலையில் உயிர் விடும் தும்பியாய் இருந்தால் என்ன???
வண்ணங்களுக்கு இருக்கும் மதிப்பு நன்றிகெட்ட மனிதருக்கில்லை...
கணக்கில் அடங்காத வண்ணங்கள்....
நமது எண்ணங்களுக்கு வழு சேர்க்கிறது...
மனித வாழ்வும் நிறத்தோடு பிண்ணிப் பிணைகிறது....
காதலித்தால் சம்மதம் பச்சை வர்ணமாம்...
எதிர்த்து நின்றால் சிவப்பு வர்ணமாம்...
ஆபத்திலும் தான் சிவப்பை அறியலாம் இரத்த வர்ணமாக....
பார்க்கும் கண்களுக்குள் எத்தனை எத்தனை நிறங்கள்.....
துள்ளி ஓடும் முயல் வெள்ளை நிறமே...
இன்னிசைப்பாடும் குயில் கருப்பு நிறமே...
எட்டாத வானம் நீல நிறமே...
கலர் வர்ணம் தூவும் வானவில் ஏழு நிறமே...
அகவும் மயிலின் அற்புத நிறத்தை பார்க்கும் அழகும் வண்ணமயமே...
கருப்பு சாயத்தை தளர்த்தி கலர் வர்ணம் பூசுகின்றோம்..
ஒவ்வொரு வர்ணமும் நம்முள் ஆறாத காயத்தைக் கொண்டிருக்கும்...
யாரும் அறியாமல் ஆழ்மனதில் கருப்பாக புதைக்கப்பட்டிருக்கும்...
நாமும் நிறமும் நாளும் பின்னிப்பிணையும் சக்கரமே.....
குணரத்னம் பிரியதர்ஷிணி
இலங்கை புசல்லாவ




