முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
கலை & இலக்கியம்

நிறங்களுக்குள் ஒழிந்தோமா??? - ஜோர்ஜ் றஜீவ்சன்

இவ்வார உணர்ச்சிக் கவிதை

நீண்ட தவமிருந்து
தாய் நீளிராவும் விழித்திருந்தாள்

நிந்தைகளின் நெடுஞ்சாலையில்

நித்தமும் பெற்றோரின் பயணம்

வரம் வாங்கி
வாழ வந்தும் புவியில்

எண்ணங்களின் வர்ணங்கள்

நம்மை வகுப்புகளாய் வகையாக்கியது

மதமெனும் மஞ்சள்
மனங்களைச் சிகப்பாக்கி விட்டது

இனப் புற்று நோய்

இதயங்களை இறுக்கிவிட்டது

பச்சை வயல்களை
பாலைவனமாக்குவதே அபிவிருத்தியாம்

மொழிவாதம் உறவுகளை

முடமாக்கிச் சுருக்கி விட்டது

மூலவர்ணம் மூலவேராகி
மூலமாகத் மனிதந்தனை வாட்டுகிறது

எங்கு மனிதம்?

ஏது புனிதம் ?புரியவில்லை

நீலமாகவே இருக்க வேண்டிய
நீதியின் தலைகளின்

கழுத்தில் கத்தி வைக்கப்படுகிறது

கருப்புக் கட்டுக்களால்

தொடுதிரையில் வலைகளில் சிக்கி
தொலைந்த பிணைப்புகளால்

தொரடர்மாடிகளிலும் தொலைவில்

தனிமையே நம்மிடை தொடர்கிறது

நேற்றுவரை இருந்த சொந்தம்
வேற்றுக் கிரகவாசிளாய்

வாழும்போதே வாழ மறந்து

வாழ வழிதேடும் வானரங்களாய்

இருப்பவரே இன்னும் சேர்ப்பதால்
இல்லாதவர் இல்லாதவராக

இருப்பதைப் பகிர மனமிலாமல்

இறைவனை இறைஞ்சுபவராக

ஒரே முகத்தில்
ஓராயிரம் ஒப்பனைகள்

அரிதாரமின்றி அபாரமான

ஓஸ்கார் தோற்றுவிடும் நடிப்பாற்றல்

நற்குணங்களை இழந்து
நாய்போல அலைவதில் நாட்டம்

நல்லவர் எங்கேயென

நாளும் தேடிட ஓட்டம்

நம்பிக்கை துரோகத்தால்
நட்டாற்றில் துடுப்பின்றிப் படகு

நன்மை செய்தலருகி

நயவஞ்சனை மலிந்த கிடுகு

அறமிழந்த அரசியலும்
அதிகார ஆணவத் தலைகளும்

புறமுதுகு காட்டும்

புலனற்ற வாய்ச்சொல் வீரர்களும்

மாதர் அறிவைக் கெடுக்கும்
மானிடப் பதர்களும்

மாபாவத்தில் மகுடமேற்றி

மார்தட்டும் மாங்காய்த் தலைகளும்

இந்த வியாதியின் நிறங்கள்
இத்தலைமுறையோடு முடியட்டும்

அன்பினில் ஆரோசித்து

அடுத்த சந்ததி சிரிக்கட்டும்

இரத்தினம்.ஜோர்ஜ் றஜீவ்சன்
பிரான்ஸ்

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • கலை & இலக்கியம்

    நிறங்களுக்குள் ஒழிந்தோமா - சரண்யா யூட் சுதர்ஷன்

    பாராட்டுக் கவிதை நாம் நிறங்களுக்குள் ஒழிந்து கொண்டு நம் நிஜங்களை மறந்து போனோம்.. என்னையே மறந்து நான் வாழ்ந்த வேளை ... என்னுள் வானவில்லாய் வந்து…

    மேலும் வாசிக்க →
  • கலை & இலக்கியம்

    நிறங்களுக்குள் ஒழிந்தோமா ? - கதிசித்தன்

    பாராட்டுக் கவிதை பச்சையும் மஞ்சளும் பறக்குது பார் வெள்ளையும் நீலமும் அழகாய் தெரியுது பார் ஒரு வண்ணக் கொடி பல வண்ணக் கொடி பெற்ற சுதந்திரம் பேணி காக்கப்பட்டதா?…

    மேலும் வாசிக்க →
  • கலை & இலக்கியம்

    நிறங்களுக்குள் ஒழிந்தோமா - புவி

    இவ்வார சிறப்புக் கவிதை நிறங்களை மீட்க நித்தம் நித்தம் ஒரு பயணம் ஒளிக்கு வியர்க்காத விழிகளை நோக்கி... கலங்கரை விளக்காய் நிறங்களை காட்டுகிறேன் - அதில் நிஜங்களை…

    மேலும் வாசிக்க →