நிறங்களுக்குள் ஒழிந்தோமா - புவி
இவ்வார சிறப்புக் கவிதை
நிறங்களை மீட்க
நித்தம் நித்தம் ஒரு பயணம்
ஒளிக்கு
வியர்க்காத விழிகளை நோக்கி...
கலங்கரை விளக்காய்
நிறங்களை காட்டுகிறேன் - அதில்
நிஜங்களை காட்டுகிறேன்
பூக்கள் அள்ளி பூசிக்கொண்ட நிறங்களை
நிழல்களில் ஒழித்து வைக்கிறது
நிலத்திற்கு காட்டாமல்
இந்த அழகிய பூவுலகின் நிறங்களை
கண்கள் தின்று தீர்க்குமோ -அதுவும்
அள்ளித்தீர்ந்து போகுமோ..
நிறத்தால் மட்டுமே
நினைவில் இருக்கும் மலர்கள்
சாயம் போகுமானால்
சந்தைக்கும் வந்திருக்காது - நம்
சிந்தைக்கும் வந்திருக்காது
முப்பாட்டகமாய் - மனிதனின்
மூளை வைத்திருக்கிறது
முக்கோடி குணங்களை நிறங்களாக..
சூழ்நிலைகள் தோண்டும் போது- நிறங்கள்
சுயநினைவைப் பெறுகிறது
நிலையில்லா நிறங்களுக்கு
தொலைதூர பயணமில்லை பயனுமில்லை
நீதி நெறியில்லா குணங்கள்
நித்திரைக்கு நிரம்பூசாது - அங்கே
கனவுகள் கண்கள் திறப்பதே இல்லை
கனவுகளுக்கு வண்ணமடிக்க தூய எண்ணமே
தூரிகையாகட்டும்..
புத்தமோகன் விநாயக மூர்த்தி
சோமையம்பாளையம் -கோவை




