முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
கலை & இலக்கியம்

நிறங்களுக்குள் ஒழிந்தோமா - சரண்யா யூட் சுதர்ஷன்

பாராட்டுக் கவிதை

நாம் நிறங்களுக்குள் ஒழிந்து கொண்டு
நம் நிஜங்களை மறந்து போனோம்..

என்னையே மறந்து நான் வாழ்ந்த வேளை ...

என்னுள் வானவில்லாய்

வந்து நிறங்களைத் தந்தவன் நீ...

அந் நிறங்களில் நான் அறிந்தேன்
பல குணங்களை...

உன் கோபத்தில் கொதித்தது சிவப்பு...

உன் புன்னகையில் சிந்தியது நீலம்...

உன் உற்சாகத்தில் தெறித்தது மஞ்சள்...
உன் காதலில் கண்டேன் பச்சை...

உன் அமைதியில் உணர்ந்தேன் வெள்ளை...

உன் தைரியத்தில் பார்த்தேன் கருமை...

உடலில் ஓடும் உதிராம் போல்
உன்னால் வாழ்வில் மலர்ந்தது

பல வண்ண வானவில்...

அது எனக்கு காதலை மட்டும் கற்றுத் தரவில்லை...
பல காலமாய் நான் நிறங்களுக்குள் ஒழிந்து

மீள வழியின்றிக் கிடக்கின்றேன்

என்றும் கற்றுத் தந்தது...

திருமதி.சரண்யா யூட் சுதர்ஷன்,
திருகோணமலை.

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • கலை & இலக்கியம்

    நிறங்களுக்குள் ஒழிந்தோமா ? - கதிசித்தன்

    பாராட்டுக் கவிதை பச்சையும் மஞ்சளும் பறக்குது பார் வெள்ளையும் நீலமும் அழகாய் தெரியுது பார் ஒரு வண்ணக் கொடி பல வண்ணக் கொடி பெற்ற சுதந்திரம் பேணி காக்கப்பட்டதா?…

    மேலும் வாசிக்க →
  • கலை & இலக்கியம்

    நிறங்களுக்குள் ஒழிந்தோமா??? - ஜோர்ஜ் றஜீவ்சன்

    இவ்வார உணர்ச்சிக் கவிதை நீண்ட தவமிருந்து தாய் நீளிராவும் விழித்திருந்தாள் நிந்தைகளின் நெடுஞ்சாலையில் நித்தமும் பெற்றோரின் பயணம் வரம் வாங்கி வாழ வந்தும்…

    மேலும் வாசிக்க →
  • கலை & இலக்கியம்

    நிறங்களுக்குள் ஒழிந்தோமா - புவி

    இவ்வார சிறப்புக் கவிதை நிறங்களை மீட்க நித்தம் நித்தம் ஒரு பயணம் ஒளிக்கு வியர்க்காத விழிகளை நோக்கி... கலங்கரை விளக்காய் நிறங்களை காட்டுகிறேன் - அதில் நிஜங்களை…

    மேலும் வாசிக்க →