முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
கலை & இலக்கியம்

எழுத்தாளர் குகதா அவர்களின் “குலதெய்வம்” நூல் வெளியீட்டு விழா,

20.09.2026 ஞாயிற்றுக்கிழமை, கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை புதிய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக தீபகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினர்களாக

• நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள்

• கரைச்சிப் பிரதேச செயலாளர் திரு. தவச்செல்வம் முகுந்தன் அவர்கள்

ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக

• பூநகரி ஓய்வுநிலை கோட்டக் கல்வி அதிகாரி திரு. நாகேந்திரம் கணேஸ்வரநாதன்

• கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலய ஓய்வுநிலை அதிபர் திரு. கந்தையா இரட்ணகுமார்

• கிளி/செல்வநகர் அ.த.க. பாடசாலை அதிபர் திரு. சி. மகேந்திரராஜா

ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கௌரவ விருந்தினர்களாக

• தொற்றுநோயியல் வைத்திய அதிகாரி, வைத்திய கலாநிதி மா. ஜெயராசா

• கவிஞர் வேல் லவன்

• சட்டத்தரணி திரு. தனபாலசிங்கம் லக்சன்

• கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் திரு. அ. வேழமாலிகிதன்

ஆகியோர் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

நூல் வெளியீட்டுரை கவிஞர் யோ. புரட்சி அவர்களால் கவிதை வடிவில் சிறப்பாக வழங்கப்பட்டது.

நயவுரையானது எழுத்தாளரும் தமிழாசானுமான திரு. கனகரெட்ணம் செந்தூரன் அவர்களால் சிறப்புற ஆற்றப்பட்டது.

“குலதெய்வம்” என்பது அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஊடாக வெளிவரும் எழுத்தாளர் குகதா அவர்களின் இரண்டாவது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு படைப்பாளியின் எழுத்துப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்த இந்நூல் வெளியீட்டு விழா, இலக்கிய ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் கலை இலக்கியத் துறையினரின் பங்கேற்புடன் சிறப்பாக நிறைவுற்றது.

படைப்புகள் பெருகட்டும்…

தமிழும் இலக்கியமும் தழைக்கட்டும்…!

அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் – திருகோணமலை”

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்

  • கலை & இலக்கியம்

    ஈழத்து இலக்கிய வானில் ஒரு மின்னும் நட்சத்திரம்

    து. திலக் (கிரி) எனும் வரலாற்றுப் பதிவாளன். ​ஒரு சமூகத்தின் வரலாற்றையும் அடையாளத்தையும் பேணிப் பாதுகாப்பது சாதாரண காரியமன்று. அதிலும் குறிப்பாக புலம்…

    மேலும் வாசிக்க →