முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
கலை & இலக்கியம்

ஈழத்து இலக்கிய வானில் ஒரு மின்னும் நட்சத்திரம்

து. திலக் (கிரி) எனும் வரலாற்றுப் பதிவாளன்.
​ஒரு சமூகத்தின் வரலாற்றையும் அடையாளத்தையும் பேணிப் பாதுகாப்பது சாதாரண காரியமன்று. அதிலும் குறிப்பாக புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தன் தாய்மண்ணின் ஆளுமைகளையும், படைப்பாளிகளையும் தேடிப் பிடித்து உலகறியச் செய்வது ஒரு வரலாற்றுப் பெருங்கடமை. அந்த உயரிய கடமையை அமைதியாகவும் நேர்த்தியாகவும் தன் தோள்களில் சுமந்து வருகிறார். து. திலக் (கிரி) எனும் வைரப் பேனா.

​சுவிஸ்சர்லாந்தின் உறைபனியிலும் கடுமையான குளிரிலும் தன் அத்தியாவசியப் பணிகளை முடித்துவிட்டு களைத்த கண்கள் தூக்கத்தைத் தேடும் வேளையிலும்

"எம் மண்ணின் வைரங்களைப் பாதுகாக்க வேண்டும்"

என்ற ஒரே லட்சியத்தோடு இரவுகளை வெளிச்சமாக்கியவர் சகோதரன் திலக்.

​ஈழத்து மண்ணிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் 50 மேலாளுமைகளின் இலக்கிய உழைப்பை ஒரே குடுவையில் சேகரித்து "வைரக்குடுவையாக தந்துள்ளார்.

இது ஈழத்து இலக்கியப் பதிவியலில் பொறிக்கப்பட்ட ஒரு பொற்காலம்.

இந்த நீண்ட தேடலிலும் தியாகப் பயணத்திலும் அவருக்கு தோள் கொடுக்கும் அவரது துணையாளரின் பங்களிப்பும் போற்றத்தக்கது.

​யாருடைய சிபாரிசுக்கும் அச்சுறுத்தலுக்கும் வளைந்து கொடுக்காத திலக் அவர்களின் நேர்மையான பேனா.

'வீரகேசரி' ஞாயிறு வார வெளியீட்டில் தொடர்ந்து 114 வாரங்களைக் கடந்துள்ளது.

மேலும் பல நூறு வாரங்களை கடந்து சாதனை படைக்க வேண்டும் என்பது எல்லோரின் ஆசை.

​மதம், இனம், பூகோளம் எனக் எந்த வரம்புகளுக்குள்ளும் சிக்காமல் உலகெங்கும் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் சேவையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பெருமை இவரைச் சாரும்.

​

இவரது உழைப்பை வெறும்

"சமூக வலைத்தளப் பதிவு" என்று சுருக்கிவிட முடியாது. இது ஈழத்து இலக்கிய உலகிற்காகத் தொகுக்கப்பட்ட நிகரற்ற வரலாற்று ஆவணம்.

​

சகோதரன் ​திலக் அவர்களின் பேனா இலக்கியத்தை மட்டும் எழுதவில்லை அவரது இதயம் மனிதநேயத்தையும் சேர்த்தே சுவாசிக்கிறது.

"ஏர் நிலம்"

அமைப்பின் ஊடாக தாயகத்தில் நலிவுற்ற மக்களின் கல்வி வளர்ச்சிக்கும், வாழ்வாதார உயர்வுக்கும் கரம்கொடுத்து வரும் இவரது சமூகப் பணிகள் மெய்சிலிர்க்க வைப்பவை.

​தொடரட்டும் இந்த வரலாற்றுச் சுவடு.

​அடுத்தவரை வாழ்த்தவே மனமில்லாத சுயநல உலகத்தில் அடுத்தவர் புகழை உலகறியச் செய்யத் தன் தூக்கத்தையும் உழைப்பையும் தியாகம் செய்யும் சகோதரன் து. திலக் (கிரி) அவர்களின் இந்தப் புனிதமான பயணம் 114 வாரங்களோடு நின்றுவிடக் கூடாது. தடைகளைத் தாண்டி புதிய சிகரங்களைத் தொட்டு, இன்னும் பல நூறாண்டுகள் இப் பணி தொடர வேண்டும்.

​தமிழையும் தமிழ் படைப்பாளிகளையும் தன் உயிர்மூச்சாக நேசிக்கும் இந்த வைர மனிதனுக்கு, உலகத் தமிழ் படைப்பாளிகள் மற்றும் சமூகத்தின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளும் கோடி நன்றிகளும்

பகிர்க

இதே பிரிவின் மேலும் பதிவுகள்