"நூல் கொண்டு நிமிர்" - தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி.
அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை அமைப்பினரால்
இன்று மாணவர்களிடையே வாசிப்பின் மீதான தேடலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் எமது "நூல் கொண்டு நிமிர்" நிகழ்வு மிகச் சிறப்பாக
உவர்மலை தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரியில்
முன்னெடுக்கப்பட்டது
இவ் விழிப்புணர்வு செயற்பாட்டில் கலந்துகொண்ட அன்பு மாணவர்களின் சிந்தனைத் திறனும், ஈடுபாடும் எமக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தன.
சமூக ஊடகங்கள் வழங்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து செல்வி. அபிநயா ரகுராம் பல ஆழமான உண்மைகளை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.
சமூக ஊடக மாயைகளில் சிக்காமல் உண்மையான தரவுகளை வாசிப்பின் மூலமே முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை மாணவர்களுக்கு வலியுறுத்தினோம். வாசிப்பு தரும் அறிவின் அபரிமிதமான பெறுமதியையும் பகிர்ந்துகொண்டோம்.
மாணவர்கள் வாசிப்பினால் உயர்வடைய வேண்டும் என்ற உன்னத நோக்கோடு, பாடசாலை நூலகத்திற்குச் சிறு தொகுதி நூல்களையும் இதன்போது அன்பளிப்பாக வழங்கி மகிழ்ந்தோம்.
இந்நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற பக்கபலமாய் இருந்த கல்லூரி அதிபர் அவர்களுக்கும், திருமதி. மோகனா ஆசிரியை மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். மேலும், இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த இலங்கை வங்கி முகாமையாளர் திரு. ந.து.ரகுராம் அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நூல் கொண்டு நிமிர்...
தொடர்ந்து வாசியுங்கள், உயரங்கள் பல வெல்லுங்கள்.




