உலகளாவிய இலங்கைத் தமிழ் கலைஞர்களுக்கான ஓர் அன்பழைப்பு!
கலை, இலக்கியத்தின் ஊடாக உலகை இணைக்கும் "அன்பின் பாதை"அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.anpinpathai.org), தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் இலங்கைத் தமிழ் கலைஞர்களைப் பெருமிதத்துடன் வரவேற்கிறது.
எமது இணையத்தளத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள " படைப்பாளிகள் பதிவகத்தில்" உங்களை இணைத்துக்கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
நீங்கள் ஏன் இணைய வேண்டும்?
உங்களின் பெறுமதிமிக்க கலை, இலக்கியப் படைப்புகள் மற்றும் வெளியீடுகளை ஆவணப்படுத்தலாம். நீங்கள் பெற்ற விருதுகள், கௌரவங்கள் மற்றும் அடைவுகளை உலகறியச் செய்யலாம். உங்களின் தனித்துவமான கலைப்பயணத்தை எதிர்காலத் தலைமுறைக்காகப் பதிவு செய்யலாம். உங்கள் கலை அடையாளத்தை உலகரங்கில் நிலைநிறுத்த இன்றே எமது இணையத்தளத்தில் உங்களைப் பதிவு செய்துகொள்ளுங்கள்!
மேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு,
இணையத்தளம்: www.anpinpathai.org
மின்னஞ்சல்: ennampolvalkkaitco@gmail.com
புலனம்: +94 77212 1508




