பரிசளிப்பு விழா-2026
"அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை" கலை இலக்கிய மன்றத்தினால், மாணவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் 26.09.2026 சனிக்கிழமை காலை 9:00-12:00 வரை இவ்வருடம் நடத்தப்பட்ட போட்டிகளின் பரிசளிப்பு விழா திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் மிகச் சிறப்பாகவும் வெகு விமரிசையாகவும் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தேவராஜா அரவிந்தன்(சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணர்,போதனா வைத்தியசாலை திருகோணமலை. கௌரவ விருந்தினர்கள் திரு.மோ.சார்ள்ஸ் அல்வின் (உதவிச் செயலாளர்,கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு),மற்றும் திருதி சுபத்ரா ஜோன் தேவதாஸ்(அதிபர்,மெதடிஸ்த மகளிர் கல்லூரி)ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில்
1.உறுப்பெழுத்து,கதை எழுதுதல் போட்டி-2026
2.தமிழ்த்தின போட்டி வெற்றியாளர்-2026
3.கல்வி வெற்றியாளர்-2026
4.விடுமுறை கால வாசிப்பு வெற்றியாளர்-2026
5.தொடர் போட்டிகளில் பங்கேற்றமைக்கான பாராட்டு.
6.கலை இலக்கிய ஆர்வலர் கௌரவிப்பு
7.கலை இலக்கிய ஆளுமை கௌரவிப்பு
ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.
கலை இலக்கிய ஆர்வலர்களான
$.திரு.அ.ரவீந்திரன் .B.A(Hons)Dep.in Education
$.திரு.அருணன் மீனாட்ச்சிசுந்தரம்
$.திரு.அன்னலிங்கம்.குகனேஸ்வரலிங்கம்
ஆகியோருக்கு
"அன்பின்பாதை கலை இலக்கியப் பேரார்வலர்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கலை இலக்கிய ஆளுமைகளான
கலாபூஷணம் நிலாவெளியூர் கெஜதர்மா மற்றும் கலாபூஷணம் வேலாயுதம்பிள்ளை சரவணபவானந்தம் ஆகியோரை கௌரவித்து "அன்பினபாதை கலை இலக்கியச் செம்மல்" விருது வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பு விருதாக கலாபூஷணம் ஷெல்லிதாசன் அவர்களுக்கு "அன்பின்பாதை வாழ்நாள் கலைஞர்" விருதினை அன்பின்பாதை எண்ணம் போல் வாழ்க்கை குழுமத்தினர் வழங்கி கௌரவித்தனர்.



