அன்பின்பாதை – “சிறுகதைச் சிகரம்”
சிறுகதைப் போட்டி – மார்கழி 2026
மாதம் ஒரு சிறுகதைக்கு ரூ. 2,500/- பரிசு!
அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.anpinpathai.org பெருமையுடன் அறிமுகப்படுத்தும் “சிறுகதைச் சிகரம்” மாதாந்த சிறுகதைப் போட்டியின் மார்கழி மாதத்திற்கான போட்டி அறிவிப்பு இதோ!
சிறுகதை எழுதும் ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் அனைவரையும் இப்போட்டியில் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம்.
சிறுகதைக்கான தலைப்புகள்
1. கடலலைகளின் கதை
2. மண் வாசனை
3. கனவுகள் தொடர்கதை
4. தலைமுறை தவறிய காலம்
5. பணத்தில் மறைந்த உறவு
பரிசு மற்றும் அங்கீகாரம்
- தெரிவு செய்யப்படும் சிறந்த சிறுகதைக்கு இலங்கை ரூபா 2,500/- பரிசாக வழங்கப்படும்.
- சிறந்த சிறுகதைகளுக்கான மின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
- தெரிவு செய்யப்படும் சிறுகதைகள் அனைத்தும் எமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.
போட்டிக்கான நிபந்தனைகள்
1. சிறுகதை சுய ஆக்கமாகவும் இதற்கு முன்னர் எங்கும் பிரசுரமாகாததாகவும் இருத்தல் வேண்டும்.
2. சிறுகதை 1,200 சொற்களுக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.
3. மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் சிறுகதைகள் மட்டுமே போட்டிக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
4. சிறுகதைகள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகளில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட வேண்டும்.
5. சிறுகதையை அனுப்புவோர் தமது முழுப் பெயர், தொடர்பு விபரங்கள், WhatsApp இலக்கம் மற்றும் தமது நிழற்படம் ஒன்றையும் இணைத்து அனுப்புதல் வேண்டும்.
சிறுகதைகளை அனுப்புவதற்கான வழிமுறை
உங்கள் சிறுகதைகளை அனுப்புவதற்கும் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் எமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி அல்லது WhatsApp இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ளுங்கள்.
🌐 இணையத்தளம்: www.anpinpathai.org
இறுதித் திகதி
20.12.2026
உங்கள் எழுத்தாற்றலால் சிறுகதை உலகில் புதிய உச்சங்களைத் தொடுங்கள்!
சிறுகதைச் சிகரம் – உங்கள் எழுத்துக்கு ஓர் உயரிய மேடை!
அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம்




